வெளிச்சம் கொடு நீதிதேவதை வருகிறாள்!. posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[22 May 2015] IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 40688
சமாதானமடை சாமானியனே, சமாதானமடை..காசேதான் கடவுளடா என்ற சித்தாந்தவாதிகளுக்கு இது தேன்போன்ற செய்தி. சிந்தை குளிரும் நிகழ்வு.!
காசைவைத்து எந்த கயமைத்தனத்தையும் வாங்கியபின் அதன் மூலம் கிடைக்கும் வெற்றி இந்த உலகம் போற்றும்தெய்வத்தன்மையாகிவிடுகிறது. இதை எதிர்ப்பவர்களுக்கு கிடைக்கும் பட்டமோ எதிர்காலத்தில் கம்பியெண்ண காத்திருக்கும் கயவர்கள், திருடர்கள், ஊரைவிட்டு துரத்தப்படவேண்டியவர்கள்!
எவர்களுக்கும் எங்கள் பத்திரமாற்று தங்கத்தாயை பற்றி இமியளவு குறைகூற எந்த அருகதையும் கிடையாது. எங்கள் தங்கத்தை அவர்களுக்கா பிராத்தித்த அத்தனை தெய்வசக்தியும் காப்பாற்றிவிட்டது. அந்த தெய்வ சக்தியாலும் ,எல்லாம் வல்ல இறைவனுடன் தொடர்புள்ள சக்தியின் பொருட்டாலும்தான் இப்படியொரு மகிழ்வுறும் முடிவு எங்கம்மாவிவிற்கு கிடைத்துள்ளது!.
நீதிதேவதை நெஞ்சார வாழ்த்தி நெஞ்சுடன் கட்டித்தழுவி நீ புடம்போட்ட கட்டித்ததங்கத்தாய், கறைபடியா கன்னித்தாய் உன்கரம் எப்படியோ அப்படியே உன் ஆட்சி அதிகாரத்திலுள்ளவர்களும் அத்தனை பேர்களும் புண்ணியம் செய்கின்ற பத்திரைமாற்று மாணிக்கங்கள் அவர்கள் அனைவர்களுடன் அருமையான அமைதியான அழுக்கற்ற ஆட்சியையை மேலும் தொடர்ந்திடுவாயாக, என்று நீதிதேவதை வாழ்த்தி வழியனுப்பி வைத்திருக்கிறாள்!
வாழ்க நீதிதேவதையின் வாழ்த்து! வாழ்க நடுநிலைமை! வாழ்க நடுநாயக ஆளுமை சக்தியாளர்களின் நீதி! வாழ்க இதையெல்லாம் வாழ்த்தும் தன்னை நடுநிலையானவர்கள் என்று கூறிக்கொள்ளும் நெஞ்சங்கள்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross