Re:...மின்னொளியில் ஆட்டம் மயிரிழையில் ஓட்டம் posted bymackie noohuthambi (kayalpatnam)[23 May 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 40710
முதல் முறையாக மின்னொளியில் கால்பந்தாட்டம் பார்த்த அனுபவம். பொன் விழா ஆண்டில் புதியதொரு சாதனை வாழ்த்துக்கள்.
KSC போராடித் தோற்றார்கள் என்ற வாசகத்தை ஜீரணிக்க முடியவில்லை. வெற்றியின் விளிம்பில் நின்றவர்களை - இன்னொரு நாள் விளையாட வைத்து தோல்வி அடைந்து இருந்தாலும் மனம் ஆறி இருக்கும் .
திடகாத்திரமாக இருந்த ஒருவனை திடீரென்று இருதய துடிப்பு நிறுத்த நோய்(HEART ATTACK ) தாக்கி ஆளை அவுட் ஆக்கியது போல் உணர்ந்தேன். சமன் செய்யும் TIE BREAKER SYSTEM சரியான ஒரு தீர்வு என்று தெரியவில்லை ஒரு மணி நேரம் போராடி வெற்றி வாய்ப்பை இழந்தாலும் மின்னொளியில் இவர்கள் ஆட்டம் கண்ணொளியில் நிலைத்து நிற்கிறது..
மயிரிழையில் இந்த ஆட்டத்தின் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்ட முறை ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப் பட வேண்டியதுதான் என்ற நெறிமுறை கால்பந்தாட்ட கழகத்தால் அங்கீகரிக்கப் பட்டது என்பதால் அதை விமரிசித்து பேசுவதில் அர்த்தமில்லை.
இன்று தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்படும் நீதிபதி குமாரசாமி தீர்ப்பை எப்படி விமர்சனம் செய்தாலும் அதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என்ற நிதர்சன உண்மை இந்த விளையாட்டிலும் பொருந்தி போகிறது. மற்றப் படி, KSC வீரர்களின் ஒவ்வொரு அசைவும் பாராட்டுக்குரியதே . இதை தோல்வி என்று சொல்ல முடியாது.
கை நழுவிப் போன வாய்ப்பு என்றுதான் சொல்ல முடியும்.
மீண்டும் களம் காண்பார்கள் வெற்றி வாகை சூடுவார்கள்.
OUR GLORY IS NOT IN NEVER FALLING , BUT IN RISING EVERY TIME WE FALL .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross