அல்லாஹ்! காப்பாற்ற வேண்டும் posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[21 April 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 4072
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
DCW தொழிற்சாலையில் தீ விபத்து குறித்து மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி நடத்தி காண்பிக்கப்பட்டது மகிழ்ச்சியே. குறைந்த பட்சம் இந்த ஒரு பாதுகாப்பிலாவது கவனம் செலுத்தி விபத்தைத் தடுப்பது நம் எல்லோருக்குமே நன்மையை தரும்.
------------------------------------
மக்களே! DCW நிர்வாகம் தீ விபத்து குறித்து மிகவும் கவனம் செலுத்துவதன் நோக்கம் சுயநலமே அன்றி வேறில்லை.
முக்கியமாக அங்கே தீ பிடித்தால் தொழிற்சாலை முழுவதும் அழிந்து விடும். சக்திவாய்ந்த கெமிகல்கள் உள்ள தொழிற்சாலை என்பதால்
தீயை அணைப்பது என்பது மிக, மிக கடினம்.
அதனால் தொழிற்சாலை நாசமாகுவதோடு நூற்றுக்கணக்கான உயிர்களுக்கு சேதங்கள் ஏற்படும்.
அதன் காரணமாக நஷ்டஈடு அது, இது என்று தொழிற்சாலையை (நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ) மூட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவார்கள். இவைகளை தவிர்க்கவே இந்த தீ அணைப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள்.
------------------------------------
மக்களில் சிலர் நினைப்பார்கள் ஒத்திகை என்ன உண்மையாகவே அந்த தொழிற்சாலை எப்படியாவது தீ பிடித்து எரிந்து நாசமாக போகட்டும் என்று.
அப்படி யாரும் நினைத்தால், இல்லை சபித்தால் அது தவறு.
அல்லாஹ்! காப்பாற்ற வேண்டும், அங்கே தீ பற்றி VCM டேங்க் எறிந்தால் அதை சுற்றியுள்ள பல ஊர்கள் அழிந்துவிடும் , பல ஆண்டுகள் அதன் பாதிப்பு அவ்விடத்தை சுற்றி இருக்கும்.
எப்போதுமே இந்த தொழிற்சாலை நம்மை சுற்றியுள்ள ஊர்களுக்கு ஆபத்துதான், அவர்கள் முறையான பராமரிப்பு செய்யாதவரை.
-------------------------------------
DCW உதவி தலைவர் ஜெயகுமார் நிருபர்களிடம், இந்த ஆலை முற்றுலும் பாதுகாப்பு கொண்ட ஆலையாக செயல்படுகிறது என்றாராம்.
இருக்கலாம் தொழிற்சாலைக்கு பாதுகாப்பாக , ஆனால் சுற்றியுள்ள ஊர்களுக்கு பாதுகாப்பு இல்லையே!. சுற்றுச்சூழல் மாசு படிந்திருக்கிறதே!!.
சுற்றுச்சூழலையும் முறையாக கவனித்து சீர்படுத்தினால் பாதுகாப்புக் கொண்ட தொழிற்சாலை என்பதை ஏற்றுக்கொள்ளலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross