நகராட்சியை இனி மலரச்செய்வது கடினம் posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[21 April 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 4074
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
இதைப் பார்த்து சில மக்கள் சிரிப்பார்கள், சில மக்கள் முகம் சுளிப்பார்கள்.
ஆனால் பல மக்கள் தங்களையே நொந்துக் கொள்வார்கள் அல்லது இதையெல்லாம் பொறுத்துக்கொள்வார்கள் ஏனென்றால் அவர்கள்தானே நகர்மன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுத்தார்கள். செய்த தவறுக்கு தண்டனை அனுபவிக்க வேண்டாமா ?
---------------------------------------
மக்கள் யாராவது சிந்திக்கிறீர்களா? புதிய ரோடு போடாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் இப்படி ரோட்டை தோண்டிப்போட்டு குண்டும் குழியுமாக விட்டு வைப்பதில் எத்தனை துன்பங்களை அனுபவிக்க வேண்டியது உள்ளது? குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் என பாதிக்கபட்டோர்கள் ஏராளம், ஏராளம் இதை தட்டி கேட்பதற்கு எந்த இயக்கமும், கட்சியும், கழகமும், பேரவையும், சங்கமும் வராது!!!!!
ஒட்(டு)டை போடுவதற்கு எல்லோரும் நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ சொல்வார்கள் ஆனால் ரோட்டை போடுவதற்கு எந்த முகமும் பாராமுக'மாகிவிடும்.
----------------------------------------
மக்களே!
பட்டுப்போன மரமாகிவிட்ட நகராட்சியை இனி மலரச்செய்வது கடினம். எனவே வருகின்ற நகராட்சி தேர்தலில் ஒழுக்க சீலர்களை, சுறு சுறுப்பானவர்களை நகர் மன்றத்துக்கும் - மக்களுக்கும் பாலமாக இருக்கக் கூடியவர்களை தேர்ந்தெடுத்து ஊர் மக்கள் முகம் சுளிக்காவண்ணம் பார்த்துக்கொள்ளுங்கள். வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross