செய்தி: ஜூன் 07 அன்று, திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில் கட்டப்பட்டள்ள “மஸ்ஜிதுர் ரஹீம்” புதிய பள்ளிவாசல் திறப்பு விழா! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...எல்லா மனிதரும் தொழ வாருங்கள் என்றே அழைப்பது பள்ளிவாசல்... posted bymackie noohuthambi (kayalpatnam)[26 May 2015] IP: 180.*.*.* India | Comment Reference Number: 40759
அது ஒரு முஸ்லிம் நகர்மன்ற தலைவராக இருந்த காலம். ஒரு முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலம். தமிழக சட்ட மன்றத்தில் சுமார் 15 முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் இருந்த காலம். ஒரு முஸ்லிம் அமைச்சராக இருந்த காலம். இவ்வளவு பொன்னான வாய்ப்புக்களை பெற்றிருந்தது திருநெல்வேலி.
ஆனால் அப்போது பேருந்து நிலையம் அருகில் ஒரு பள்ளி வாசல் நிறுவுவதற்கு சகல வாய்ப்புக்களும் இருந்தது. ஆனால் அந்த உயர்ந்த உள்ளம் அந்த உயர்ந்த எண்ணம் சில முஸ்லிம்களுக்கு தோன்றினாலும் அதற்கான முயற்சிகள் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது என்ற வேதனையான செய்தியை நண்பர் ஒருவர் என்னிடம் சொல்லி வருத்தபட்டார்.
ஆனால் இப்போது கால சக்கரத்தின் சுழற்சி - நமது பள்ளிவாசல்கள் புதிய பரிணாமம் பெற்று எல்லா இடங்களிலும் ஜமாஅத் தொழுகையுடன் ஒன்றிப்போன முஸ்லிம்கள் நிறைந்து காணப்படுகிறார்கள்.அல்ஹம்து லில்லாஹ். இந்த கவலையின் காரணமாக ஒரு சிலர் இதற்கு விதை ஊன்றினார்கள். இப்போது அது விருட்சமாகி, இன்ஷா அல்லாஹ் ஜூன் 7ம் திகதி திறப்பு விழா காண நம்மை அழைத்திருக்கிறார்கள்.
நாம் பல வேலைகளாக நெல்லை செல்கிறோம். மணிக் கணக்கில் பாஸ்போர்ட் அலுவலகம் மற்றும் இதர தேவைகளுக்கு புதிய பேருந்து நிலையத்தில் நாம் காத்திருக்கிறோம் . இன்ஷா அல்லாஹ் இந்த பள்ளிவாசல் சேவையை நாம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அங்கு பெண்களுக்கும் தொழுவதற்கு தனி இடம் அமைத்துள்ளார்கள்.
நமதூரில் இருந்து வெளியூர் செல்லும் பெண்கள் வீட்டில் தொழுதுவிட்டு போகவேண்டும். அல்லது தொழுகையை களாவாக்கி வீட்டுக்கு திரும்பி வந்த பின் தான் தொழ வேண்டும். பேருந்து நிலையம் அருகே உள்ள பள்ளிவாசலுக்கு கூட தப்பி தவறி பெண்கள் போய் விடக் கூடாது. இந்த நிலையை மாற்ற நமது பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள செயெது ஹுசைன் பள்ளி வாசல் நிர்வாகம் பெண்கள் தொழுது விட்டு பயணம் செய்ய ஒரு சிறப்பு ஏற்பாடு செய்யவேண்டும் என்று இந்த நல்ல நேரத்தில் அந்த நிர்வாகத்திடம் வேண்டி பதிவு செய்கிறோம் . அல்லாஹ் நாம் எங்கு சென்றாலும் ஆண்களோ பெண்களோ ஒரு வேளையும் கலா இல்லாமல் தொழுது விட்டு நம் பணிகளை வெற்றியுடன் முடித்து விட்டு திரும்ப அல்லாஹ் கிருபை செய்வானாக.
இந்த பெரு முயற்சியை செய்து முடித்துள்ள எல்லா நல்ல உள்ளங்களுக்கும் அல்லாஹ் சுவர்க்கத்தில் மாளிகைகள் கட்டி தருவான் என்ற நபி மொழியையும் இந்த நேரத்தில் நினைவு படுத்தி து ஆ செய்கிறோம். அல்லாஹ் கபூல் செய்வானாக. ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross