காயலர்கள் உட்பட பல பகுதிகளைச் சேர்ந்தோரின் நன்கொடைகளைக் கொண்டு - திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள “மஸ்ஜிதுர் ரஹீம்” பள்ளிவாசல் திறப்பு விழா, வரும் ஜூன் மாதம் 07ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று 16.00 மணிளவில் நடைபெறவுள்ளது.
இவ்விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்து, அப்பள்ளியின் தலைவர் கே.எம்.ஏ.நிஜாம் வெளியிட்டுள்ள அறிக்கை:-
[செய்தியில் சிறு திருத்தம் செய்யப்பட்டது @ 18:04 / 26.05.2015]
1. Re:...எல்லா மனிதரும் தொழ வாருங்கள் என்றே அழைப்பது பள்ளிவாசல்... posted bymackie noohuthambi (kayalpatnam)[26 May 2015] IP: 180.*.*.* India | Comment Reference Number: 40759
அது ஒரு முஸ்லிம் நகர்மன்ற தலைவராக இருந்த காலம். ஒரு முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலம். தமிழக சட்ட மன்றத்தில் சுமார் 15 முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் இருந்த காலம். ஒரு முஸ்லிம் அமைச்சராக இருந்த காலம். இவ்வளவு பொன்னான வாய்ப்புக்களை பெற்றிருந்தது திருநெல்வேலி.
ஆனால் அப்போது பேருந்து நிலையம் அருகில் ஒரு பள்ளி வாசல் நிறுவுவதற்கு சகல வாய்ப்புக்களும் இருந்தது. ஆனால் அந்த உயர்ந்த உள்ளம் அந்த உயர்ந்த எண்ணம் சில முஸ்லிம்களுக்கு தோன்றினாலும் அதற்கான முயற்சிகள் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது என்ற வேதனையான செய்தியை நண்பர் ஒருவர் என்னிடம் சொல்லி வருத்தபட்டார்.
ஆனால் இப்போது கால சக்கரத்தின் சுழற்சி - நமது பள்ளிவாசல்கள் புதிய பரிணாமம் பெற்று எல்லா இடங்களிலும் ஜமாஅத் தொழுகையுடன் ஒன்றிப்போன முஸ்லிம்கள் நிறைந்து காணப்படுகிறார்கள்.அல்ஹம்து லில்லாஹ். இந்த கவலையின் காரணமாக ஒரு சிலர் இதற்கு விதை ஊன்றினார்கள். இப்போது அது விருட்சமாகி, இன்ஷா அல்லாஹ் ஜூன் 7ம் திகதி திறப்பு விழா காண நம்மை அழைத்திருக்கிறார்கள்.
நாம் பல வேலைகளாக நெல்லை செல்கிறோம். மணிக் கணக்கில் பாஸ்போர்ட் அலுவலகம் மற்றும் இதர தேவைகளுக்கு புதிய பேருந்து நிலையத்தில் நாம் காத்திருக்கிறோம் . இன்ஷா அல்லாஹ் இந்த பள்ளிவாசல் சேவையை நாம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அங்கு பெண்களுக்கும் தொழுவதற்கு தனி இடம் அமைத்துள்ளார்கள்.
நமதூரில் இருந்து வெளியூர் செல்லும் பெண்கள் வீட்டில் தொழுதுவிட்டு போகவேண்டும். அல்லது தொழுகையை களாவாக்கி வீட்டுக்கு திரும்பி வந்த பின் தான் தொழ வேண்டும். பேருந்து நிலையம் அருகே உள்ள பள்ளிவாசலுக்கு கூட தப்பி தவறி பெண்கள் போய் விடக் கூடாது. இந்த நிலையை மாற்ற நமது பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள செயெது ஹுசைன் பள்ளி வாசல் நிர்வாகம் பெண்கள் தொழுது விட்டு பயணம் செய்ய ஒரு சிறப்பு ஏற்பாடு செய்யவேண்டும் என்று இந்த நல்ல நேரத்தில் அந்த நிர்வாகத்திடம் வேண்டி பதிவு செய்கிறோம் . அல்லாஹ் நாம் எங்கு சென்றாலும் ஆண்களோ பெண்களோ ஒரு வேளையும் கலா இல்லாமல் தொழுது விட்டு நம் பணிகளை வெற்றியுடன் முடித்து விட்டு திரும்ப அல்லாஹ் கிருபை செய்வானாக.
இந்த பெரு முயற்சியை செய்து முடித்துள்ள எல்லா நல்ல உள்ளங்களுக்கும் அல்லாஹ் சுவர்க்கத்தில் மாளிகைகள் கட்டி தருவான் என்ற நபி மொழியையும் இந்த நேரத்தில் நினைவு படுத்தி து ஆ செய்கிறோம். அல்லாஹ் கபூல் செய்வானாக. ஆமீன்.
பயணகாலங்களில் பயன்தரும்வகையில் பேருந்து நிலைய “மஸ்ஜிதுர் ரஹ்மான்” இறை இல்லத்தோடு அனைத்துமக்களுக்காகவும் அவசரகால ஊர்திசேவையையும் செய்துதந்திருக்கிறார்கள் மாஷா அல்லாஹ் மெச்சத்தக்கவிஷயம் நமதுசமூக மக்கள் இருபாலருக்கும் எந்தவேளைக்கும் தயங்காதுசென்றுசுத்தம்செய்துகொள்ளவும்வழிபடவும் ஏதுவான வகையில் தேவையான ஒன்றாகவேஇருந்தது இந்தச்சேவையை துரிதமாகவும் செய்துமுடித்திருக்கிறார்கள் அல்ஹம்துலில்லாஹ்
இன்ஷா அல்லாஹ் திறப்புவிழாக்களின் எல்லா நன்னிகழ்ச்சிகளும் தக்கதருணத்தில் வல்லவனின் அருளுடன் செம்மையாக நடந்து நிறைவேற வாழ்த்துவதுடன் துஆசெய்துகொள்வோம்
வல்ல இறைவன் இந்தக்காரியத்திற்கு யாரெல்லாம் முதுகெலும்பாய் நின்றுமுயற்சித்து உழைத்தார்களோ இன்னும் பொருள் உடலுழைப்பு யோசனைகளெல்லாம் தந்தார்களோ அவர்களுக்கும் இப்பள்ளியை சரியாகப்பயன்படுத்துக்கொள்ளும் அனைவருக்கும் இருலோக
நற்பாக்கியங்க்களைக் கொடுத்தருள்வானாக இன்னும் இதுபோன்ற இறைபாதையிலும் மக்கள் நலப்பாதையிலும் தன்னார்வத்துடன் வந்து சேவைசெய்ய நம்மனதில் நல்லெண்ணத்தை விதைப்பானாக ஆமீன் ஆமீன் ஆமீன் யா ரப் அல் ஆலமீன் .
இன்ஷா அல்லாஹ் இறை இல்லத்திறப்புவிழாவில் அனைவரும்கலந்து இறையருளில்நனைந்துகொள்வோம் ஆமீன்
3. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[26 May 2015] IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40762
அஸ்ஸலாமு அலைக்கும்
மாஷா அல்லாஹ்....நமது '' திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில் கட்டாயம் ஒரு பள்ளிவாசல் ''அவசியம் தேவை தான் .....
அனைத்து ஊர் பொது மக்களும் பள்ளிவாசல் இல்லாமல் நிறைய மக்கள் ரொம்பவும் கஷ்ட பட்டார்கள் ........
ஆனால்....ரொமவும் காலம் கடந்து வந்தது ......இன்ஷா அல்லாஹ் வருகின்ற நோன்பில் அனைத்து பொது மக்களுக்கும் ரொம்ப உதவியாக இருக்கும் ....
புதிய பள்ளிவாசல் உதையமாக '' காரணமாக இருந்த அனைத்து உள்ளங்களுக்கும் வல்ல இறைவன் நற்பாக்கியத்தையும் & உடல் ஆரோக்கியத்தையும் ''கொடுத்தருள்வானாகவும் ஆமீன்......
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross