காயல்பட்டினம் நகர்மன்றத்தின் மாதாந்திர கூட்டம் அவசர கூட்டமாக நாளை (வெள்ளிக்கிழமை; 29-5-2015) மதியம் 3 மணிக்கு நடைபெறவுள்ளது. நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் 40 பொருட்கள் விவாதிக்கப்படவுள்ளன.
இது குறித்து நகர்மன்றத் தலைவர் - தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவல் வருமாறு:
எல்லாப்புகழும் இறைவனுக்கே, வல்லோன் அவனே துணை நமக்கு!
நாளை (29-5-2015) வெள்ளிக்கிழமை மதியம் 3 மணிக்கு, இறைவன் நாடினால் - நகர்மன்ற கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் - இணைக்கப்பட்டுள்ள பொருட்கள் விவாதிக்கப்படவுள்ளன.
இக்கூட்டப்பொருளில் புதிய செலவீனங்கள் குறித்த விஷயங்கள் இணைக்கப்படவில்லை.
இறைவன் நாடினால், அடுத்த சில நாட்களில், உறுப்பினர்களுடன் - ஒவ்வொரு வார்டின் தனிப்பட்ட தேவை குறித்தும், நகரின் பொதுவான தேவைகள் குறித்தும் கலந்தாலோசனை செய்து, பட்ஜெட் நிதி ஒதுக்கீடு செய்து - புதிய பணிகள் குறித்து முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவித்து கொள்கிறேன்.
குறிப்பு:
நகரின் பல சாலைகள் புனரமைக்கப்படாமல் இருப்பது குறித்து என்னிடம் சிலர் வினவி வருகிறார்கள். இரண்டாம் குடிநீர் திட்டத்தின் ஓர் அம்சமான உள்ளூர் குழாய்கள் பதிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதால் சாலை பணிகள் தற்போது மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
1. ஏன்..? எதற்காக..? 7 ஆண்டுகளாக இத்தொட்டி குறித்து எவராலும் நகராட்சியில் கேள்வி எழுப்ப படாமல் இருப்பதற்குரிய காரணம் தான் என்ன..? posted byதமிழன் முத்து இஸ்மாயில். (INDIA)[29 May 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 40771
இன்று நடைபெறும் நகர்மன்றத்தின் அவசர கூட்டம் நகர்மக்களுக்கு பயலுள்ள கூட்டமாக தடங்கள் / இடையூறுகள் இல்லாமல் சுமூகமாக நடந்தேற வேண்டுகிறேன்..! வாழ்த்துக்கள்..!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross