காயல்பட்டினம் நகர்மன்றத்தின் அவசர கூட்டம் இன்று 15.00 மணிக்கு என நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கூட்ட வருகைப் பதிவேட்டில் 07ஆவது வார்டு உறுப்பினர் ஜெ.அந்தோணி, 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், 15ஆவது வார்டு உறுப்பினர் கே.ஜமால் ஆகிய மூவர் மட்டுமே கைச்சான்றிட்டு கலந்துகொண்டனர்.
போதிய உறுப்பினர்கள் கலந்துகொள்ளாததால் கூட்டம் நடைபெறாமலேயே முடிவுற்றது. அசைபடப் பதிவுகளுடன் கூடிய விரிவான தகவல்கள் விரைவில்...
1. Re:... posted bynizam (india)[29 May 2015] IP: 180.*.*.* India | Comment Reference Number: 40773
இது பொறுப்பற்ற செயல் இதன் விளைவுகளை மக்கள் நிச்சயம் வரும் தேர்தலில் காட்டுவார்கள் உறுபினர்களே இது போன்று தாங்கள் கூட்டத்தை புறகனித்தால் தங்கள் மேல் உள்ள நியாயமான அபிபிராயங்களும் அழிந்து விடும் தங்களுக்கு பல சமயங்களில் வக்காலத்து வாங்கும் என் போன்றவர்களின் வாயையும் அடைத்து விடும் தங்களுக்கு ஓட்டளித்த சாதாரண ஜனங்களின் தலையில் மண்ணை போட்டதுக்கு சமம்
2. நம்மூரின் தலைநசீபு posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[30 May 2015] IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 40774
கண்ணியமிகு நகரமன்ற உறுப்பினர்களே, உங்கள் உள்ளத்தில் என்ன இருக்கிறது என்பதை வெளிப்படையாக சொல்லுங்களேன், ஒன்றும் புரியா பாமரர்களாகிய பொதுமக்கள் எங்களுக்கும் கொஞ்சம் தெரிந்துகொள்ள வாய்ப்பாகுமே!
உங்களின் நியாமான தன்னிலை விளக்கத்திற்கு பின் நீங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் (ஒட்டுமொத்த மன்ற புறகணிப்பு) நியாயமானதாக இருக்கும் பட்சத்தில் அனைத்து மக்களும் உங்கள் பின் நிற்பார்கள். அதைவிட்டு எந்த காரணமும் இல்லாமல் மக்கள் நலன்களை தீர்மனாமாக நிறைவேற்றும் இடத்தை நாங்கள் புறக்கணிப்போம் என்றால், உங்கள் உள் மனது எதிரி யாரகா இருந்தாலும் எங்களுக்கு அவசியம் இல்லை ஆனால் ஊர் நலனுடைய நன்மைகள் நாசமாய் போகிறது என்பதை எள்ளளாவது உங்கள் உள்ளத்தில்ன் ஓரத்தில் நிறுத்தி இறைவனக்கு அஞ்சியவர்களாக நடந்து கொள்ளுங்கள்!
எங்களால் இது மட்டில்வரைதான் சொல்ல முடியும் இதற்குமேல் நடப்பது நம்மூரின் தலைநசீபு. இந்த அவல நிலைக்கு காரணமானவர்கள் தலைவரா? உறுப்பினர்களா? அல்லது அவர்களை இயக்கும் ஈனத்தனமான எண்ணமுடைய சக்திகளா? எவராக இருந்தாலும் ஒருநாள் அந்த படைத்தோனுக்கு பதில் சொல்லியே ஆகனும்.!
3. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[30 May 2015] IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40776
அஸ்ஸலாமு அலைக்கும்
நமது மாண்புமிகு நகர் மன்ற உறுப்பினர்களை நாம் குறை கூறுவதில் ஓன்று பிரயோசனம் இல்லை .... இனியாவது வருகின்ற நகர் மன்ற தேர்தலில் இது போன்ற '' பிரோசனம் '' இல்லாத மன்ற உறுப்பினர்களை தேர்வு செய்யாது மிகவும் கவனமாகவே நம் ஊர் பொது மக்கள் யாவர்களும் ஒற்றுமையுடன் இருந்து செயல்லாற்றிளால் மிக சரியானதே .......
நகர் மன்ற கூட்டத்தை இவர்கள் புறகனிப்பதால் இவர்களுக்கு ஒன்றுமே நட்டம் இல்லை ......இவர்களை தேர்வு செய்த ஊர் பொது மக்களுக்களின் நலனில் தான் மிகுந்த பாதிப்பு .....+ பொது மக்களுக்கு தங்கள் தொகுதியில் பாதிப்பு ,,
நம் உறுப்பினர்கள் கொஞ்சமாவது பொது மக்களின் நலனில் கவனம் செலுத்துவார்கள் என்று பார்த்தால் ...இன்னும் இப்படியே தான் உள்ளார்கள் ....அல்லாஹ் போது மாணவன் ...
நாம் பொருத்து விட்டோம் ......நாம் கொஞ்சம் '' பொறுப்பற்றவர்களை நினைத்து ..... பொறுப்போம் .....
4. Re:...கலந்து கொண்ட உறுப்பினர்கள் திரு ஜெ . அந்தோனி, சகோ ஷம்சுதீன்,மற்றும் சகோ கே.ஜமால் ஆகியோருக்கு பாராட்டுக்கள். posted byOmer Abdul Qadir (Chennai)[30 May 2015] IP: 182.*.*.* India | Comment Reference Number: 40777
கலந்து கொண்ட உறுப்பினர்கள் திரு ஜெ . அந்தோனி, சகோ ஷம்சுதீன்,மற்றும் சகோ கே.ஜமால் ஆகியோருக்கு பாராட்டுக்கள்.கலந்து கொள்ளாத பிற உறுப்பினர்களுக்கு ????????????????????
நகர மன்றம் தங்களின் வருகைக்காக கார்திருந்தும் யாரும் கலந்து கொள்ளாதது என்பது தாங்கள் அனைவரும் காயல்மா நகர மக்களுக்கு இளைத்த துரோகம் நகர மன்ற கூட்டம் என்பது தலைவர் எடுக்கும் முடிவுக்கு தலையாட்டுவது இல்லை உறுப்பினர் ஆகிய உங்களின் விருப்பத்தையும் கருத்துக்களையும் கேட்டு நல்ல முடிவெடுப்பதற் காகவே கூட்டம் நடத்த படுகிறது அதில்நீங்கள் கலந்து கொண்டு மக்களுக்கு பயன் அலிக்காததிட்டம் இருந்தால் அதை மறுத்து இருக்கலாம்
கூட்டத்தில் மக்கள் பயன் பெறக்கூடிய விசயம்அதிகம் உள்ளது அதில் உள்ள உல்நோக்கங்கள் மக்களுக்கு தெரியாது அதைப்பற்றி நீங்கள் விவாதித்து இருந்தால் மக்களும் தெரிந்து கொள்வார்கள் தங்களை தேர்ந்தெடுத்த மகளுக்கு நல்லது செய்யவேண்டும் என்று நினைத்து தனிப்பட்ட விருப்பு வெறுப்பு களைவிட்டு விட்டு இனி வரும் கூட்டத்தில் தவறாது கலந்து கொண்டு தீய சக்திகளுக்கு துனைபோகாமல் மக்களுக்கு பயன் தர கூடிய வேலைகளை தாமதப்படுத்தாமல் செயல் படுத்த உதவிடுமாறு கேட்டு கொள்கிறேன் அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross