காயல்பட்டினம் கடற்கரையில், மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் கட்டிடத்திற்கு நேர் கிழக்கில், கீரிக்குளம் பகுதியில் கடந்த சில நாட்களாக மீன்பிடி படகுகள் முகாமிட்டுள்ளன.
ஜூன் 01 திங்கட்கிழமை மாலையில் அவர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் பெரியதாழையைச் சேர்ந்தவர்கள் என்றும், அங்கிருந்தவாறே மீன் பிடிக்கச் சென்று திரும்புவதாகவும், படகிலேயே குடியிருப்பதாகவும் கூறினர்.
அவர்கள் முகாமிட்டுள்ள பகுதி பொதுமக்கள் அமரும் பகுதி என்றும், மீன் பிடிக்க வரையறுக்கப்பட்டுள்ள இடங்களில் முகாமிட்டு தொழிலைச் செய்துகொள்ளுமாறும் சமூக ஆர்வலர்கள் சிலர் அவர்களிடம் கூற, மறுநாளே இடம் மாறிக்கொள்வதாக அவர்கள் கூறினர். |