காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக் கல்லூரியின் திருக்குர்ஆன் மக்தப் கட்டிடம், அதிக மாணவர் சேர்க்கை காரணமாக இடப்பற்றாக்குறையுடன் இருந்து வந்தது. இதைக் கருத்திற்கொண்டு, அக்கட்டிடம் – மஹ்ழரா நிர்வாகத்தால் விரிவாக்கிக் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு நிகழ்ச்சி, 23.05.2015 சனிக்கிழமையன்று 17.00 மணியளவில் நடைபெற்றது.
மஹ்ழரத்துல் காதிரிய்யா சபையின் தலைவர் ஹாஜி எஸ்.கே.இசட்.ஆப்தீன் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். அதன் செயலாளர் ஹாஜி எம்.ஏ.எஸ்.அபூதல்ஹா முன்னிலை வகித்தார்.
மக்தப் மாணவர் ஏ.பி.முஹம்மத் ஹம்ஸா நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மாணவர் எஸ்.ஏ.சி.வாஸிஃப் முக்தார் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். [கிராஅத் அசைபடத்தை, https://www.youtube.com/watch?v=sjp7UnJRR1U&feature=youtu.be என்ற இணையதள பக்கத்தில் சொடுக்கிக் காணலாம்.] மாணவர் எம்.எம்.எல்.அஹ்மத் இப்றாஹீம் வரவேற்புரையாற்றினார். மக்தப் ஆசிரியர் ஹாஃபிழ் காரீ சொளுக்கு எஸ்.எம்.எஸ்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் தவ்ஹீத் அறிமுகவுரையாற்றினார். மாணவர் கே.ஓ.ஏ.கே.மொகுதூம் நெய்னா நன்றி கூற, துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
மஹ்ழரா அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் அஹ்ஸனீ ஃபாழில் பாக்கவீ - இந்நிகழ்ச்சியில் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி சிறப்புரையாற்றினார்.
மாணவர்கள் நலனுக்காக மஹ்ழரா நிர்வாகம் எல்லா நலவுகளையும் செய்து தரக் காத்திருப்பதாகவும், அதன் ஓர் அம்சமே இக்கட்டிட விரிவாக்கம் என்றும், நிர்வாகத்தின் நோக்கத்தை நன்கு உணர்ந்தவர்களாக, மாணவர்கள் தாம் வந்த நோக்கத்தில் கவனம் சிதறாமல் ஒழுகி வந்து, நிர்வாகத்திற்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் முழு மகிழ்ச்சியைத் தர முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் தனதுரையில் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், மஹ்ழரா மக்தப் மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
மஹ்ழரா மக்தப் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
மஹ்ழரா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |