காயல்பட்டினம் ஜாவியா அரபிக்கல்லூரி நிர்வாகத்தால், பள்ளி செல்லும் மாணவர்களுக்காக நடத்தப்பட்டு வரும் தீனிய்யாத் (மார்க்க அடிப்படைக்) கல்வி நிறுவனம் “மக்தபத்துர் ராஸிய்யா”.
இங்கு பயிலும் நூற்றுக்கணக்கான மாணவர்களின் கல்வித் திறனை வளர்ப்பதற்காக ஆண்டுதோறும் திருமறை குர்ஆன் சிறு அத்தியாயங்கள் மனனம், பேச்சுப்போட்டி, துஆ - பிரார்த்தனை மனனப் போட்டி உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படுவது வழமை.
அந்த அடிப்படையில், நடப்பாண்டின் போட்டிகள் இம்மாதம் 05, 06, 07 நாட்களில் (வெள்ளி, சனி, ஞாயிறு), ஜாவியா வளாகத்தில் நடைபெறுகிறது. போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு பரிசுகளும், 8 ஆண்டுகள் பாடத்திட்டத்தைக் கொண்ட தீனிய்யாத் கல்வியை முடித்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கும் விழா, இம்மாதம் 10ஆம் நாள் புதன்கிழமையன்று ஜாவியா வளாகத்தில் நடைபெறவுள்ளது.
போட்டிகள் நடைபெறும் நாட்கள் மற்றும் நேர விபரங்கள்:-
05.06.2015 - வெள்ளிக்கிழமை 16.30 மணி முதல் 20.30 மணி வரை
06.06.2015 - சனிக்கிழமை 16.30 மணி முதல் 20.30 மணி வரை
07.06.2015 ஞாயிற்றுக்கிழமை
(1) 09.00 மணி முதல் 12.30 மணி வரை
(2) 16.30 மணி முதல் 20.30 மணி வரை
மகளிருக்கு, அம்பல மரைக்காயர் தெரு ஜரூக்குல் ஃபாஸீ பெண்கள் தைக்காவில் இடவசதி செய்யப்பட்டுள்ளது.
தகவல்:
ஹாஃபிழ் M.S.முஹம்மத் ஸாலிஹ்
மற்றும்
ஹாஃபிழ் M.A.செய்யித் முஹம்மத்
நிகழ்ச்சிகள் அனைத்தும், இணையதளத்தில் நேரலை செய்யப்படவுள்ளது. http://www.ustream.tv/channel/zaviakayal என்ற இணைப்பில் சொடுக்கி, நேரலையைப் பெறலாம் என ஜாவியா நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாவியா - மக்தபத்துர் ராஸிய்யா தீனிய்யாத் பிரிவின் சார்பில் கடந்தாண்டு (2014) நடத்தப்பட்ட போட்டிகள் குறித்த செய்தியைக் காண13912 இங்கே சொடுக்குக!
ஜாவியா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|