மியான்மர் (பர்மா) நாட்டில் முஸ்லிம்கள் ஆயிரக் கணக்கில் படுகொலை செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்தும், முஸ்லிம்களுக்கெதிரான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தக் கோரியும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், இம்மாதம் 02ஆம் நாள் செவ்வாய்க்கிழமையன்று காயல்பட்டினம் சீதக்காதி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமுமுக நிர்வாகிகளான ஆஸாத், முஹ்ஸின் முர்ஷித், எம்.கே.ஜாஹிர் ஹுஸைன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலாளர் ஹஸன் நன்றி கூறினார்.
தமுமுக தலைமைக் கழக பேச்சாளர் சிவகாசி முஸ்தஃபா சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், நகர பொதுமக்கள் மற்றும் தமுமுக அங்கத்தினர் திரளாகக் கலந்துகொண்டனர்.
தகவல் & படங்கள்:
K.முஹ்ஸின்
(முர்ஷித் டிஜிட்டல் ஜெராக்ஸ்)
தமுமுக தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |