பள்ளி செல்லும் மாணவர்களுக்கு, அவர்களது வார விடுமுறைக் காலங்களில் மார்க்க அடிப்படைக் கல்வியைப் புகட்டுவதற்காகவும், திருமறை குர்ஆனை மனதிலேற்றிப் பாதுகாக்கும் ஹாஃபிழ்களை உருவாக்குவதற்காகவும், காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் வளாகத்தில் இயங்கி வருகிறது மத்ரஸத்துல் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம் மற்றும் அதன் திருக்குர்ஆன் ஹிஃப்ழு (மனன)ப் பிரிவு.
ஹிஃப்ழுப் பிரிவு மாணவர்களுக்கான நடப்பாண்டின் இறுதித் தேர்வுகள், இம்மாதம் 02ஆம் நாளன்று நடைபெற்றது. அதன் நிறைவில், முதல் மூன்றிடங்களைப் பெற்ற மாணவர்கள் பெயர் பட்டியல் வருமாறு:-
முதற்பிரிவு:
(1) எஸ்.எம்.செய்யித் இப்றாஹீம்
(2) எஸ்.ஏ.இன்ஸாஃப் ஸுலைமான்
(3) எம்.கே.எஸ்.அப்துல் ஜலீல்
இரண்டாம் பிரிவு (அ):
(1) பி.ஏ.செய்யித் இப்றாஹீம்
(2) ஏ.எம்.ஸுலைமான் லெப்பை
(2) வி.டி.என்.முஹம்மத்
(3) எம்.என்.முஹம்மத் உவைஸ்
இரண்டாம் பிரிவு (ஆ):
(1) எம்.ஐ.எஸ்.ஷெய்கு அப்துல் காதிர்
(2) எம்.யு.முஹ்யித்தீன் முஸ்தஃபீழ்
(3) எம்.பி.ஏ.முஹம்மத் நூஹ்
மூன்றாம் பிரிவு:
(1) டபிள்யு.எஸ்.எம்.எஸ்.கிழுறு முஹம்மத்
(2) டீ.ஏ.ஸுலைமான் ழாஃபிர்
(3) எஸ்.ஐ.அபுல்கலாம் ஆஸாத்
நான்காம் பிரிவு:
(1) எஸ்.என்.செய்யித் அபூபக்கர் முத்துவாப்பா
(2) பீ.இசட்.ஏ.முஹம்மத் அலீ
(3) எஸ்.ஏ.பி.ஜெய்னுல் ஆப்தீன் ரவாஹா
(3) எம்.எம்.அப்துல் அஜீஸ்
ஜூன் 02 அன்று காலையில் தேர்வுகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, மத்ரஸா ஆசிரியர்களைக் கண்ணியப்படுத்தி வழியனுப்பும் நிகழ்ச்சி, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ தலைமையில் நடைபெற்றது. அதன் முதல்வர் நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ, கவுரவ ஆசிரியர் மவ்லவீ நஹ்வீ ஐ.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா ஃபாஸீ ஆகியோர் விடைபெற்றுச் செல்லும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களையும், விடுமுறையைக் கழிக்கவுள்ள மாணவர்களுக்கு அறிவுரைகளையும் உள்ளடக்கி உரையாற்றினர்.
பின்னர், ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகையும், நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன. நிர்வாகத்தின் சார்பாக மத்ரஸா அபிமானிகள் அவற்றை ஆசிரியர்களுக்கு வழங்கினர். மாணவர்களுக்கு ஜூன் 02 முதல் ஜூன் 06 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
13.30 மணியளவில் மாணவர்கள் அனைவருக்கும் களறி சாப்பாடு மதிய விருந்தாக வழங்கியுபசரிக்கப்பட்டது.
தகவல் உதவி:
ஹாஃபிழ் B.A.முஹம்மத் உக்காஷா
ஹாமிதிய்யா திருக்குர்ஆன் மனனப் பிரிவிற்கு 2013ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆண்டில் நடைபெற்ற ஆண்டிறுதித் தேர்வு குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஹாமிதிய்யா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |