காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் ஆண்டுதோறும் நடத்தும் - உள்ளூர் அளவிலான - யுனைட்டெட் ஃபுட்பால் லீக் (UFL) கால்பந்து சுற்றுப்போட்டிகள், மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான பொன்விழா சுற்றுப்போட்டிகளைத் தொடர்ந்து வரும் மே மாதம் 25ஆம் நாளன்று துவங்கியது. கடந்தாண்டு 8 அணிகள் பங்கேற்றிருக்க, நடப்பாண்டு, பின்வருமாறு 10 அணிகள் பங்கேற்றன. இன்று மாலை நடைபெறும் இறுதிப்போட்டியில், ஹார்டி பாய்ஸ் அணியும், யுனைட்டெட் அணியும் மோதுகின்றன.
துவக்கப் போட்டியில், காவல்துறை உயரதிகாரியும் - சென்னை பெரம்பூர் ப்ளூஸ் கால்பந்துக் கழகத்தின் நிறுவனருமான மோகன், மற்றொரு போட்டியில் - இரண்டாமிடம் பெற்ற சென்னை MSU அணியின் பயிற்சியாளரும், சுங்கத்துறை மேலாளருமான தியாகராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். அவர்களுக்கு, ஆட்ட வீரர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
மே 25 முதல் 30ஆம் நாள் வரை 20 லீக் (துவக்கச் சுற்றுப்) போட்டிகள் நடைபெற்றன.
30.05.2015 அன்று காலையில் 3 போட்டிகள் நடைபெற்றன. முதல் போட்டியில், ஜி-கூல் அணியும், கே-லெவன் அணியும் மோதின. அதில் ஜி-கூல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
2ஆவது போட்டியில் காயல் மான்யு அணியும், சில்வர் மைனர்ஸ் அணியும் மோதின. அதில் 1-0 என்ற கோல் கணக்கில் காயல் மான்யு அணி வெற்றிபெற்றது.
3ஆவது போட்டியில், உட்லண்ட்ஸ் அணியும், ஹார்டி பாய்ஸ் அணியும் மோதின. அதில், ஹார்டி பாய்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
அன்று மாலையில் காலிறுதிப் போட்டிகள் நடைபெற்றன. முதலாவது காலிறுதியில், ஹார்டி பாய்ஸ் - ஜி.கூல் அணிகள் மோதின. இரு அணிகளும் கோல் அடிக்காமல் ஆட்டம் நிறைவுற்றதால், சமனுடைப்பு முறை கையாளப்பட்டதில் 5-3 என்ற கோல் கணக்கில் ஹார்டி பாய்ஸ் அணி வெற்றிபெற்றது.
இரண்டாவது காலிறுதியில், காலரி பேர்ட்ஸ் - சில்வர் மைனர்ஸ் அணியும் மோதின. ஈரணிகளும் கோலடிக்காமல் ஆட்டம் நிறைவுற, சமனுடைப்பு முறை கையாளப்பட்டதில், 5-4 என்ற கோல் கணக்கில் சில்வர் மைனர்ஸ் அணி வெற்றிபெற்றது.
31.05.2015 அன்று அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்றன. முதலாவது அரையிறுதிப் போட்டியில் மோதிய ஹார்டி பாய்ஸ் - காயல் மான்யு அணியினர் தலா ஒரு கோல் அடித்து சமனில் ஆட்டத்தை முடிக்கவே, சமனுடைப்பு முறை கையாளப்பட்டது. அதில் 5-4 என்ற கோல் கணக்கில் ஹார்டி பாய்ஸ் அணி வெற்றிபெற்றது.
இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் சில்வர் மைனர்ஸ் அணியும், யுனைட்டெட் அணியும் மோதின. ஈரணிகளும் கோலடிக்காமல் போட்டி சமனில் முடிவுற, சமனுடைப்பு முறை கையாளப்பட்டதில் 4-3 என்ற கோல் கணக்கில் யுனைட்டெட் அணி வெற்றிபெற்றது.
இன்று (ஜூன் 01) மாலையில் நடைபெறும் இறுதிப்போட்டியில், நேற்றைய அரையிறுதிப் போட்டிகளில் வெற்றிபெற்ற ஹார்டி பாய்ஸ் அணியும், யுனைட்டெட் அணியும் மோதவுள்ளன.
இதுவரை நடைபெற்ற போட்டிகளில், அணிகள் பெற்ற புள்ளிகளின் விபரப் பட்டியல் வருமாறு:-
தகவல்:
A.S.புகாரீ
மேலதிக தகவல்கள் & படங்கள்:
ஷேக்னா PHM
S.H.ஹபீப்
ஹாஃபிழ் ஸல்மான் ஃபாரிஸ்
நடப்பாண்டு UFL கால்பந்து சுற்றுப்போட்டி குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கடந்தாண்டு (2014) UFL கால்பந்து சுற்றுப்போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஐக்கிய விளையாட்டு சங்கம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |