2ஆவது பைப்லைன் குடிநீர் திட்டத்தின் கீழ் வீடுகளுக்குக் குடிநீர் வினியோகிப்பதற்காக காயல்பட்டினத்தில் அனைத்து தெருக்களிலும் சாலையோரங்களில் தோண்டப்பட்டு, வினியோகக் குழாய் பதிக்கப்பட்டு வருகிறது. தற்போது 09ஆவது வார்டில் உள்ள அப்பாபள்ளித் தெருவில் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
நேற்று நண்பகல் 11.00 மணியளவில், குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் சிலர், அத்தெருவிலுள்ள சில வீடுகளில், “உங்களது படியை உடைக்காமல் - அதனடியில் துளையிட்டு குழாய் பதித்துத் தருகிறோம்... அதற்காக இவ்வளவு தாருங்கள்!” என சிலரிடம் ரூபாய் 300, சிலரிடம் ரூபாய் 400 என தொகை வசூலித்துள்ளனர்.
இதைக் கண்ணுற்ற அப்பகுதியின் சமூக ஆர்வலர்கள் சிலர், இதுகுறித்து வலிமையாக எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, வாங்கிய தொகைகளை உடனடியாக அவர்கள் திருப்பியளித்துள்ளனர்.
அங்கு பொறுப்பிலிருந்த பணி கண்காணிப்பாளரிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டபோது, “அவ்வாறு வசூலிக்க உத்தரவு எதுவுமில்லை... எனவே வசூலிக்கக் கூடாது... முறைகேடாகப் பணம் வசூலித்த ஊழியரை அனுப்பிவிட்டு, வேறு ஊழியர்களை நியமிக்க ஆவன செய்கிறேன்...” என்று கூறினார்.
தகவல்:
A.தர்வேஷ் முஹம்மத் |