காயல்பட்டினம் சமூக நல்லிணக்க மையம் - தஃவா சென்டரின் 18ஆம் ஆண்டு விழா நடைபெற்று முடிந்துள்ளது. அதில் திரளானோர் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்து, தஃவா சென்டர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
காயல்பட்டினம் சமூக நல்லிணக்க மையம் - தஃவா சென்டரின் 18ஆம் ஆண்டு வருடாந்திர விழா, ”இதயம் அமைதி பெற” என்ற தலைப்பில் இம்மாதம் 24ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை 17.00 மணியளவில், காயல்பட்டினம் அலியார் தெருவிலுள்ள தஃவா சென்டர் வளாக முன்புறத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிகளை, தஃவா சென்டர் மேலாளர் டீ.வி.எஸ்.ஜக்கரிய்யா நெறிப்படுத்தினார். கிராஅத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. தாமாக முன்வந்து இஸ்லாம் மார்க்கத்தைத் தம் வாழ்வியலாக்கிக் கொண்டுள்ள - தஃவா சென்டரின் புனித குர்ஆன் கல்லூரி மாணவ-மாணவியர் தமது அனுவங்களை உரைகளாக அளித்தனர். பின்னர் மாணவ – மாணவியர் பல்வேறு தலைப்புகளில் நல்ல பல கருத்துக்களைப் பொதிந்த குறுநாடகங்களை நடத்தினர்.
இஸ்லாமிய அழைப்பாளரான - கோபாலகிருஷ்ணன் என்ற யாசிர் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு “அமைதியின் மார்க்கம் இஸ்லாம்” எனும் தலைப்பில் சிறப்பரையாற்றினார்.
இவ்விழாவில், உள்ளூர் - வெளியூர்களிலிருந்து பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். பெண்களுக்கு விரிதிரை (Projector) வசதியுடன் தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முஸ்லிமல்லாத இரு ஆண்களும், ஒரு பெண்ணும் - தாமாக முன்வந்து, இஸ்லாம் மார்க்கத்தைத் தம் வாழ்வியலாக ஏற்றுக்கொண்டனர். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்!
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஃவா சென்டர் சார்பில் கடந்தாண்டு (2014) நடத்தப்பட்ட (17ஆம்) ஆண்டு விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
தஃவா சென்டர் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |