சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நல மன்றத்தின் சார்பில், ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் Cut Off சிறப்புத் தகுதி மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவியருக்கான ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் நடப்பாண்டு ஊக்கத்தொகை பெற்றிட தகுதி பெற்றுள்ள மாணவ-மாணவியரின் பட்டியலை அவ்வமைப்பு அறிவித்துள்ளது. இதுகுறித்து, அதன் செயலாளர் ஏ.டீ.ஸூஃபீ இப்றாஹீம் வெளியிட்டுள்ள அறிக்கை:-
ரியாத் காயல் நலமன்றம் வழங்கும் CUT OFF மதிப்பெண் ஊக்கத்தொகை வழங்கல்!
எமது ரியாத் காயல் நல மன்றம் அறிவித்த மருத்துவம் , மற்றும் பொறியியலுக்கான கட்ஆப் (cutoff) மதிப்பெண், மற்றும் வணிகவியல் பிரிவில் நமதூர் அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற இந்த ஆண்டுக்கான (2015) எமது பரிசுத்தொகை பெற கீழ் கண்ட மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளார்கள் என்பதனை மிக்க மகிழ்ச்சியுடன் அறிய தருகிறோம்:-
இவர்களுக்கு உண்டான பரிசுத்தொகை இன்ஷா அல்லாஹ் , இக்ரா மற்றும் காயல் பஸ்ட் டிரஸ்ட் இனைந்து நடத்தும் சந்தியுங்கள் முதல் மாணவரை என்ற நிகழ்ச்சியின் பொழுது வழங்கி சிறப்பிக்கப்படுவார்கள் . கீழ்க்கண்ட மாணவர்கள் மேலதிக விபரங்களுக்கு எமது காயல் பிரதிநிதி சகோதரர் முஹம்மது தர்வேஷ் அவர்களை (இக்ரா அலுவலகத்தில்) தொடர்பு கொள்ளலாம்.
மொத்த மாணவ , மாணவிகள் - 24
மொத்த பரிசுத்தொகை- 29,000
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியாத் காயல் நல மன்றத்தின் கடந்தாண்டு (2014) Cut Off (சிறப்புத் தகுதி) மதிப்பெண் குறித்த தகவலறிக்கைச் செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ரியாத் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |