ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம், இம்மாதம் 25ஆம் நாள் திங்கட்கிழமையன்று 19.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில், கே.எஸ்.முஹம்மத் ஷுஅய்ப் தலைமையில் நடைபெற்றது.
மவ்லவீ அலீ அக்பர் மஸ்லஹீ கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். “மக்கள் சேவை” எனும் தலைப்பில், நாகர்கோவிலைச் சேர்ந்த மருத்துவர் ஜெ.முஹ்யித்தீன் அப்துல் காதிர், “அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள்” எனும் தலைப்பில், டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் திரளானோர் கலந்துகொண்டனர்.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் காயல்பட்டினம் கிளை தலைவர் ஏ.லுக்மான் நன்றி கூறினார். ஏற்பாடுகளை, எஸ்.எச்.லுத்ஃபீ செய்திருந்தார்.
தகவல்:
A.லுக்மான்
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |