ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்றம் சார்பில், உள்ளூர் காயல்பட்டினத்தில் - மன்றத்தின் நகர்நலச் சேவைகளைச் செயல்படுத்திட தனியமைப்பு துவக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
எமது துபை காயல் நல மன்றத்தின் நகர்நலச் சேவைகளை உள்ளூரிலிருந்து செயல்படுத்திடுவதற்காக, காயல்பட்டினத்தில் தனியொரு அமைப்பைத் துவக்கிட, 08.05.2015 அன்று நடைபெற்ற மன்றத்தின் கலந்தாலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, எல்லாம்வல்ல அல்லாஹ்வின் பேரருளால், துபை காயல் நல மன்றத்தின் சேவை மையமாக “காயல் துபை நல மன்றம் – Kayal Dubai Welfare Association (KADWA)” எனும் பெயரில் புதிய அமைப்பு இம்மாதம் 25ஆம் நாளன்று துவக்கப்பட்டுள்ளது.
இதற்காக, அன்று 17.30 மணியளவில் காயல்பட்டினம் ஃபாயிஸீன் சங்க வளாகத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்திற்கு, அதன் ஒருங்கிணைப்பாளர் லேண்ட்மார்க் ராவன்னா அபுல்ஹஸன் தலைமை தாங்கி, கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்ததோடு, அமைப்பின் நோக்கம் குறித்தும் அறிமுகவுரையாற்றினார்.
அமைப்பின் நோக்கங்கள் வருமாறு:-
(1) துபையில் பணியாற்றிவிட்டு, நிரந்தரமாக தாயகம் திரும்பிய காயலர்களை ஒருங்கிணைத்து, அவர்களது நலன்களில் அக்கறை செலுத்தல்...
(2) துபையிலிருந்து நிரந்தரமாக வந்தவர்களையும், விடுமுறையில் வருவோரையும் ஒருங்கிணைத்து, கருத்துப் பரிமாறல்...
(3) துபை காயல் நல மன்றத்தால் செய்யத் தீர்மானிக்கப்படும் நகர்நலப் பணிகளை இந்த KADWA அமைப்பின் மூலம் காயல்பட்டினத்தில் செயல்படுத்தல்...
(4) காயல்பட்டினம் மக்களின் அத்தியாவசியத் தேவைகள் குறித்து KADWA மூலம் துபை காயல் நல மன்றத்திற்குத் தெரியப்படுத்தல்...
KADWA அமைப்பிற்கு பின்வருமாறு நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்:-
தலைவர்:
லேண்ட்மார்க் ராவன்னா அபுல்ஹஸன்
செயலாளர்:
எம்.ஏ.காழி அலாவுத்தீன்
துணைச் செயலாளர்:
எஸ்.எச்.ஷேக் அப்துல் காதிர் என்ற சின்ன லெப்பை
பொருளாளர்:
விளக்கு பஷீர்
மக்கள் தொடர்பாளர்:
எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர்
செயற்குழு உறுப்பினர்கள்:
(1) எம்.இ.ஷேக்
(2) எம்.ஏ.எஸ்.ஜரூக்
(3) அப்துல் ஜலீல்
(4) எம்.ஏ.மெஹர் அலீ
(5) எஸ்.ஏ.கே.பாவா நவாஸ்
(6) எம்.ஓ.மஹ்மூத்
இக்கூட்டத்தின் சிறப்பு விருந்தினராக, துபை காயல் நல மன்றத்தின் துணைத்தலைவர் சாளை ஷேக் ஸலீம் கலந்துகொண்டார். குறுகிய கால அவகாசத்திலேயே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் - ஆர்வத்துடன் கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும், கூட்டத்தை ஒருங்கிணைத்த ஒருங்கிணைப்பாளருக்கும் அவர் மன்றத்தின் சார்பில் நன்றி தெரிவித்தார்.
இவ்வமைப்பின் அடுத்த பொதுக்குழுக் கூட்டத்தை, வரும் நோன்புப் பெருநாள் கழித்து நடத்திட தீர்மானிக்கப்பட்டது.
துணைச் செயலாளர் எஸ்.எச்.ஷேக் அப்துல் காதிர் என்ற சின்ன லெப்பை நன்றி கூற, துஆ - கஃப்பாராவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.A.காழி அலாவுத்தீன்
(செயலாளர்)
துபை காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |