வீ-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் சார்பில், 2015ஆம் ஆண்டிற்கான காயல் ப்ரீமியர் லீக் க்ரிக்கெட் சுற்றுப்போட்டிகள் இம்மாதம் 15ஆம் நாளன்று துவங்கி, 26ஆம் நாள் வரை நடைபெற்று முடிந்துள்ளது. இறுதிப்போட்டியில், Fi-Sky Boys அணி ப்ளாஸம்ஸ் கோப்பையைத் தட்டிச் சென்றுள்ளது. இதுகுறித்த அறிக்கை வருமாறு:-
வீ-யூனைடெட் ஸ்போர்ட் கிளப் நடத்திய 6ஆவது ஆண்டு பிளாஸம்ஸ் கோப்பைக்கான காயல் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் கடந்த 15-ம் தேதி முதல் நேற்று (26/05) வரை காயல் ஸ்போர்டிங் கிளப் மைதானத்தில் நடத்தப்பட்டு வந்தது.
இறுதிப்போட்டியில் Fi-Sky Boys அணியும், Gallery Birds அணியும் விளையாடின, டாஸில் வெற்றிபெற்ற Fi-Sky Boys அணியினர் Gallery Brids அணியினை முதலில் பேட்டிங் செய்ய பணித்தனர். அதன்படி Gallery Birds அணியினர் 10 ஓவர்களின் முடிவில் 92 ரன்களை பெற்றிருந்தனர். தொடர்ந்து பேட்டிங் செய்த Fi-Sky Boys அணியினர் 9.4 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 94 ரன்களை பெற்று பிளாஸம்ஸ் கோப்பையை தட்டிச் சென்றனர்.
தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஐக்கிய விளையாட்டுச் சங்கத்தின் செயலாளர் ஜனாப். இல்லியாஸ், துணைச் செயலாளர் ஜனாப். S.M. உஸைர் ஹாஜி மற்றும் காயல் ஸ்போர்டிங் கிளப்பின் செயலாளர் பேராசிரியர் ஜனாப். K.M.S. சதக்தம்பி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
அதிக ரன்களை எடுத்த வீரருக்கான பரிசை Fi-Sky Boys அணியின் சுலைமான் என்ற வீரரும், அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற பரிசை Fi-Sky Boys அணியின் M.M.சாஹூல் ஹமீது என்ற வீரரும், குறைந்த அளவில் ரன்களை விட்டுக்கொடுத்ததற்கான பரிசை Saji Sports அணியின் அஷ்ரஃப் என்ற வீரர்களுக்கும் நினைவுப் பரிசுகளும், டாலர்களும் அணிவிக்கப்பட்டது.
தொடர்ந்து அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற அணிகளான KTN மற்றும் Saji Sports அணிகளுக்கான ரொக்கப் பரிசுகள் தலா ரூ.3000-த்தை காயல் ஸ்போர்டிங் கிளப்-ன் செயலாளர் பேராசிரியர் ஜனாப். K.S.M. சதக்கு தம்பி அவர்களும் மற்றும் ஜனாப். சேக்கனா ஆகியோர் வழங்கினார்கள். இந்த பரிசுகளுக்கு V.M.S. Jewellers - Silvor நிறுவனத்தினரும், Blossoms நிறுவனத்தினரும் அணுசரனை வழங்கினார்கள்.
இறுதிப் போட்டியில் வெற்றிக்கு முனைந்த அணியான Gallery Birds அணிக்கான ரொக்கப்பரிசு ரூ. 10000 மற்றும் சுழற் கோப்பையினை ஐக்கிய விளையாட்டுச் சங்கத்தின் துணைச் செயலாளர் ஜனாப். S.M. உஸைர் ஹாஜி வழங்கினார்கள். இந்த பரிசிற்கு T.Nagar - L.K.S. Gold House நிறுவனத்தினர் அணுசரனை வழங்கினார்கள்.
இறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற Fi-Sky Boys அணியினருக்கு ரொக்கப் பரிசு ரூ.15000 மற்றும் சுழற்கோப்பையினை ஐக்கிய விளையாட்டுச் சங்கத்தின் செயலாளர் ஜனாப். இல்லியாஸ் ஹாஜி வழங்கினார்கள். இந்த பரிசிற்கு ஹாங்காங் United Asia நிறுவனத்தினர் அணுசரனை வழங்கினார்கள்.
இறுதியாக நன்றியுரைக்குபின், "துஆ"வுடன் நிகழ்வுகள் நிறைவுற்றன. அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.ஜஹாங்கீர்
வீ-யுனைட்டெட் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |