தமிழக அரசு உத்தரவின் படி, காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் அம்மா உணவகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, அண்மையில் கட்டி முடிக்கப்பட்டது.
அதன் திறப்பு விழா, இன்று 15.30 மணியளவில் நடைபெற்றது. தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா, காயல்பட்டினம் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், 120 அம்மா உணவகங்கள் மற்றும் அம்மா மருந்தகங்களை, தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி மூலம் முதல்வர் ஜெ.ஜெயலலிதா திறந்து வைத்தார்.
திறப்பு விழாவைத் தொடர்ந்து, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கல் வழங்கினார்.
இவ்விழாவில், காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ம.காந்திராஜ், நகர்மன்ற உறுப்பினர்களான எஸ்.ஐ.அஷ்ரஃப் (வார்டு 01), ஜெ.அந்தோணி (வார்டு 07), எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் (வார்டு 13), கே.ஜமால் (வார்டு 15), எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன் (வார்டு 16), நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ், பொருத்துநர் நிஸார், பொறியாளர் சிவக்குமார், அதிமுக காயல்பட்டினம் நகர துணைச் செயலாளர் கே.ஏ.ஷேக் அப்துல் காதிர், சிறுபான்மைப் பிரிவு மாவட்ட செயலாளர் எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம், ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் எல்.எஸ்.அன்வர், அமலிராஜன், தளபதி ராமச்சந்திரன், மூத்த உறுப்பினர் எஸ்.ஏ.முகைதீன், நகர நிர்வாகிகளான சாக்ளா, எம்.இ.எல்.புகாரீ, என்.எம்.அகமது, சின்னத்தம்பி அப்துல் காதிர், அ.வஹீதா, காயல் மவ்லானா, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை ஒருங்கிணைப்பாளர் சொளுக்கு எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் என்ற முத்து ஹாஜி, ஜரூக், ஏ.கே.பீர் முஹம்மத், மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ உட்பட திரனானோர் கலந்துகொண்டனர்.
|