காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் சார்பில், மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான - அகில இந்திய அளவிலான கால்பந்து சுற்றுப்போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
50ஆம் ஆண்டு பொன்விழா சுற்றுப்போட்டிகள் இம்மாதம் 06ஆம் நாள் புதன்கிழமை 16.50 மணியளவில் துவங்கி, இன்று(மே 24 ஞாயிற்றுக்கிழமை)டன் நிறைவுறுகின்றன.
இறுதிப் போட்டியை முன்னிட்டு, இன்று 19.00 மணிக்கு, கத்திச் சண்டை, சிலம்பம் உள்ளிட்ட வீர விளையாட்டுக்களும், பாண்டு வாத்தியம், வானவேடிக்கை உள்ளிட்ட கண்கவர் அம்சங்களும் நடைபெறவுள்ளன.
20.15 மணியளவில் இறுதிப்போட்டி துவங்குகிறது. இப்போட்டியில் சென்னை MSUஅணியும், பெங்களூரு BDFA அணியும் மோதுகின்றன.
இந்த இறுதிப்போட்டியில், தூத்துக்குடி மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியர் எம்.மாலிக் ஃபெரோஸ்கான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, பொன்விழா சிறப்பு மலரை வெளியிட்டு, பரிசுகளை வழங்கவுள்ளார். தமிழ்நாடு கால்பந்துக் கழக தலைவர் ஜெ.ஜேஸையா வில்லவராயர் முன்னிலை வகிக்கிறார். இடைவேளையின்போது அவர்களுக்கு ஈரணி வீரர்களும் அறிமுகம் செய்துவைக்கப்படவுள்ளனர். போட்டி நிறைவுற்ற பின்னர் பரிசளிப்பு விழாவும் நடைபெறவுள்ளது.
ஏற்பாடுகளை, ஐக்கிய விளையாட்டு சங்க தலைவர் பீ.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை, செயலாளர் பீ.எஸ்.எம்.இல்யாஸ், இணைச் செயலாளர்கள் எம்.எல்.ஹாரூன் ரஷீத், ஏ.எச்.செய்யித் உமர், சுற்றுப்போட்டிக் குழு தலைவர் எஸ்.எம்.உஸைர், செயலாளர் பீ.எஸ்.அப்துல் காதிர் நெய்னா, உறுப்பினர்களான பீ.மோகன், பீ.எச்.ஹமீத் அப்துல் காதிர், ஏ.எஸ்.புகாரீ, ஏ.எச்.யாஸர் கலாமீ, எஸ்.எச்.ஹபீப் ரஹ்மான் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
இறுதிப்போட்டி அழைப்பிதழ் மற்றும் நிகழ்ச்சி விபரங்கள் வருமாறு:-
படங்கள்:
S.H.மக்பூல் (ஹாங்காங்) |