காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் சார்பில், மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான - அகில இந்திய அளவிலான கால்பந்து சுற்றுப்போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
50ஆம் ஆண்டு பொன்விழா சுற்றுப்போட்டிகள் இம்மாதம் 06ஆம் நாள் புதன்கிழமை 16.50 மணியளவில், ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் துவங்கியது.
மே 23 சனிக்கிழமையன்று 20.15 மணியளவில், இரண்டாவது அரையிறுதிப் போட்டி துவங்கியது. துவக்கமாக, வான வேடிக்கை முழங்க, பின்னணியில் மெல்லிய இசை ஒலிக்க, மைதானத்தின் பந்திளவல்கள் ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் 50ஆவது ஆண்டு பொன்விழா சிறப்புக் கொடியை ஆளுக்கொரு முனையாக விரித்துப் பிடித்தவாறு, அரங்கில் வலம் வர, அவர்களைத் தொடர்ந்து - போட்டி நடுவர்களும், ஈரணி வீரர்களும் அணிவகுத்து, மைதானத்தின் நடுப்பகுதிக்கு வந்து, தத்தம் நிலைப் பகுதிக்குப் பிரிந்து சென்ற காட்சி ரசிகர்களின் கண்களுக்கு சர்வதேச போட்டிகளை நினைவுகூரச் செய்து, விருந்து படைத்தது.
இப்போட்டியில், ASC பெங்களூரு அணியும், MSU சென்னை அணியும் மோதின. துவக்கம் முதல், ஆட்ட நிறைவு வரை ஈரணியினரும் மிகுந்த உற்காத்துடனும், களைப்பின்றியும், நாகரிமாகவும் விளையாடி, ரசிகர்களின் மனதைக் கவர்ந்தனர்.
17ஆவது நிமிடத்தில் பெங்களூரு வீரர் ஜோடின் சிங் ஒரு கோல் அடிக்க, 35ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் லால்டன் மனியா தனதணிக்காக ஒரு கோல் அடித்தார். இவ்வாறாக முதற்பாதி நிறைவுற்றது.
இரண்டாவது பாதியில் ஈரணியும் மிக வேகமாக ஆடி முயற்சித்தபோதிலும் யாராலும் கோல் அடிக்க இயலாமல், ஆட்டம் சமனில் முடிவுற்றது. சமனுடைப்பு முறை கையாளப்பட்டதில், சென்னை MSU அணி 4-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு ASC அணியை வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இன்று (மே 24 ஞாயிற்றுக்கிழமை) 20.30 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்த அணி பெங்களூரு BDFA அணியுடன் மோதவுள்ளது.
இரண்டாவது அரையிறுதிப் போட்டியை, நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த ரசிகர்கள் திரளாக அமர்ந்து கண்டுகளித்தனர். அவர்களின் பெருவாரியான ஆதரவு சென்னை அணிக்கே அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியை, மைதானத்திலிருந்து MIXLR செயலி மூலம் ஹாஃபிழ் ஸல்மான் ஃபாரிஸ் ஒலி நேரலையில் வர்ணனை செய்துகொண்டிருந்தார்.
அன்றாடம் நடைபெறும் போட்டிகள் அனைத்தும், www.azadtrophy.com என்ற இணையதளத்தில் நேரலை செய்யப்பட்டு வருகிறது.
தகவல் உதவி:
‘ஆசிரியர்’ கலீஃபா ஸதக்கத்துல்லாஹ்
Twitter update:
ஹாரூன் மீரான்
Mixlr Running Audio Commentry:
ஹாஃபிழ் ஸல்மான் ஃபாரிஸ்
நடப்பாண்டு கால்பந்துப் போட்டி குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கடந்தாண்டு நடைபெற்ற பதினேழாம் நாள் போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |