அதிமுக பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா, இன்று காலையில் தமிழக முதல்வராக மீண்டும் பதவியேற்றார். ஆளுநர் ரோசய்யா அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அவர் பதவியேற்ற அடுத்த சில நிமிடங்களில், காயல்பட்டினம் நகர அதிமுக சார்பில் பேருந்து நிலையம் அருகில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.
அதிமுக நகர இணைச் செயலாளர் கே.ஏ.ஷேக் அப்துல் காதிர் தலைமை தாங்கினார். நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் முன்னிலை வகித்தார்.
நகர்மன்ற உறுப்பினர்களான ஜெ.அந்தோணி, எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், அதிமுக நகர வார்டு நிர்வாகிகளான எம்.இ.எல்.புகாரீ, ஹாமிது, கஸ்ஸாலி மரைக்கார், ஆறுமுக நெய்னார், எஸ்.முத்து, எம்.ஐ.ஷாஹுல் ஹமீது, பீ.காளியப்பன் மற்றும் செந்தமிழ்ச் செல்வன், கட்சியின் மூத்த உறுப்பினர் எஸ்.ஏ.மெய்தீன், படையப்பா கஸ்ஸாலி, பெருமாள், வேலு, வீரப்பன், முருகன் உட்பட ஏராளமான கட்சியினர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
அதிமுக தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |