காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் சார்பில், மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான - அகில இந்திய அளவிலான கால்பந்து சுற்றுப்போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
50ஆம் ஆண்டு பொன்விழா சுற்றுப்போட்டிகள் இம்மாதம் 06ஆம் நாள் புதன்கிழமை 16.50 மணியளவில், ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் துவங்கியது.
பொன்விழாவை முன்னிட்டு, இச்சுற்றுப்போட்டியின் 2 அரையிறுதிப் போட்டிகளும், இறுதிப் போட்டியும் மின்னொளியில் நடத்தப்படவுள்ளன.
இன்று 20.15 மணிக்கு, மின்னொளியில் நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில், காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (KSC) அணியும், பெங்களூரு BDFA அணியும் மோதுகின்றன.
மின்னொளி போட்டிக்காக ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தின் நான்கு திசைகளிலும் ஒளிவெள்ள மின்விளக்குகள் பொருத்தப்பட்டு, நகர்ப்புறங்களிலிருக்கும் விளையாட்டு மைதானம் போல காட்சியளிக்கிறது. இவ்விளக்குகளுக்குத் தேவையான மின்சாரத்திற்காக, பெரிய ஜெனரேட்டரும், மைதானத்தின் வெளியில் நிறுத்தப்பட்டுள்ளது.
நடப்பாண்டு கால்பந்துப் போட்டி குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |