செய்தி: 2ஆவது பைப்லைன் குழாய் பதிக்கையில், ஊழியர்கள் முறைகேடாக பணம் வசூல்! பொதுமக்கள் கிளர்ச்சியையடுத்து திருப்பிக் கொடுத்தனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
விசுவரூபம வேதனைக்குறியதே! posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[01 June 2015] IP: 37.*.*.* Romania | Comment Reference Number: 40799
சாலைகள் தாறுமாறாக போடப்பட்டதால் எங்கள் படிக்கட்டுகளை சற்று நீட்டி கட்டியுள்ளோம்(c&p )
இப்பொழுது பணம் கொடுத்ததை எந்த அளவிற்கு எதிர்க்கும் அந்த நேர்மையானவர்களும்,அந்த ஜமாத்தும் அப்போது சீரற்ற முறையில் போடப்படும் சாலையை அப்படியே நிறுத்தும் போராட்டத்தில் இறங்கினால் சற்று தாமதம் ஆனாலும் சீரான சாலை கிடைத்திட வாய்ப்புண்டாகி இருக்குமல்லவா?
இது நம்மூரில் வேறுபல இடத்திலும் நடந்த்திருக்கிறது உதாரணம்.குத்துக்கள் தெரு.
ஆக இது வீட்டுபடிகளை தங்கள் வசதிக்கு ஏற்றார்போல் கட்டியுள்ளவர்கள் கண்டுபிடித்த காரணமாகத்தான் நினைக்கிறேன!
குழாய் பதிக்கும் ஏழை கூலியாளர்கள் உங்கள் படிகளை உடைக்காமல் பாதுகாப்பாக பைப்பை பதிக்கிறோம் என்று வீட்டு உரிமையானவர்களிடம் கூறி அதற்காக சிறிய பண உதவியை கேட்டு பெற்றிருக்கலாம்!
இந்த பணம் பெறுதல் எப்படி நடந்திருப்தென்பதுதான் முக்கியம், கட்டாயமாக கேட்டார்களா?அல்லது நாங்கள் உங்கள் படிகளை சேதாரம் பண்ணாமல் பாதுகாப்பாக வேலை செய்கிறோம் அதற்கு உதவுங்கள் என்றார்களா?என்பது இதில் கவனிக்க வேண்டியது.
எப்படி இருந்தாலும் பணம் பெற்றவர்களும் அதை கொடுத்தவரும் குற்றவாளிகளே.அதில் எந்த பாகுபாடும்
பார்க்ககூடாது.பணம் பெற்றவர்கள் மட்டும்தான் படுபயங்கர குற்றவாளியென்று பழி சுமத்தவும் கூடாது!
கோடான கோடியை முறைகேடாக பெற்றதால் சில ஆண்டுகள் சிறைதண்டனையும்,பல கோடிரூபாய் அபராதமும் பெற்று நீதிமன்ற நீதிபதியால் குற்றவாளி என்று தீர்ப்பு பெற்ற ஒரு குற்றவாளியையே இன்று கும்பிடும் தெய்வமாக போற்றப்படும் இந்த காலகட்டத்தில்.
பாவம் ஒரு ஏழை கூலியாளன் (படத்தை பார்த்தாலே பரிதாபம் கொப்பளிக்கிறது) தன் வறுமையின் வடிகாலுக்காக ஒரு சிறிய பணவுதவியை வாங்கி இருப்பதை வானுயர பரப்பி ஏதோ ஒரு கொடூர குற்றவாளியை கூண்டில் ஏற்றியது போல் வெளிச்சம் போட்டு காட்டுவதும், அதற்காக பெரிய தலைப்பிட்டு செய்திகள் தொடுப்பதும் வேதனைக்குறியதே! என்னைபொருத்தவரை..
இவர்கள் கொடுத்தார்கள் அவர்கள் வாங்கினார்கள்.அது தவறு என்று சொன்னதும் அப்பணம் திருப்பி கொடுக்கப்பட்டு விட்டது அதோடு பிரச்சினையை முடித்திருக்கலாம் அதற்காக அவர்கள் வேலையை பறிப்பதென்பதை இளகிய இதயத்தார்கள் எற்றுகொளாவார்களா எபதும் ஒரு வினாவே?
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross