இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ரஜீஊன் ….
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் அனைத்து பிழைகளையும் பொருத்து,அவர்களுக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற நற்பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்!
ஹாஜ்ஜா அவர்கள் எப்படிப்பட்ட பிள்ளைகளை பெற்றுவிட்டு சென்றிருகிறார்கள்.அல்ஹம்திலில்லாஹ்! யான்போ நகரில் வாழும்"கலவா"அபூபக்கராகட்டும்,"கலவா"இபுராகிமாகட்டும்,
இருசகோதரர்களும் நமதூரிலிருந்து வரும் காயல் சகோதரர்களை இப்பாலைவன பூமிக்கு பிழைப்பிற்காக வந்து பரிதவித்து நிற்ப்பவர்களை,அவர்கள் மனம் ஆறுதலடையும் வண்ணம் வேலையையும்,உறைவிடத்தையும்,உணவையும் கொடுத்து அரவணைத்து அவர்கள் அரபு வானில் தன்னாற்றல் கொண்டு பறக்கும் வரை அவர்களுக்கு அனுசரணையாக இன்றுவரை யான்போ நகரில் இருபவர்கள்தான் இப்புண்ணிய சகோதரர்கள்.இதற்காகவே ஒரு பெரிய வீட்டையே படித்து பல வருடங்களுக்கு முன்பிருந்தே புழக்கத்தில் வைத்திருக்கிறார்கள்! அதற்கு "காயல் ஹௌஸ்" என்ற பெயர் பொதிந்திருப்பது பலருக்கும் தெரிந்த உண்மையாகும்!
பலரின் வாழ்க்கைக்கு வழிகாட்டி ஒளி விளக்காய்த்திகளும் உங்களின் நல்லெண்ணத்தின் பொருட்டால் உங்கள் அன்புத்தாயாருக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நற்பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்!
பிள்ளைகள் கேட்கும் துவாவானது நேரிடியாக அவர்கள் பெற்றோர்களுக்கு அதாவது உங்கள் அன்புதாயாருக்கு சென்றடைந்து நிறைய,நிறைய நன்மைகள் சேர்த்துவைக்க உறுதுணையாய் இருக்கும்.என்பது அண்ணல் நபி(ஸல்) அவர்களின் அருள் மொழியாகும்! ஆகவே,நெஞ்சுருக நிறைய துவாவை அவர்களுக்காக கேட்பதில் முதன்மையாக இருங்கள்,மற்றதெல்லாம் அவர்களை நேரிடியாக சென்றடையாது!
மர்ஹூமா அவர்கள் பிரிவால் வாடும் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் அல்லாஹ்வின் அழகிய பொறுமையாகிய "சபூர் ஜமிலா"என்கின்ற பொறுமையை கொடுத்தருள்வானாக அமீன்!
மர்ஹூமா வின் பிரிவித்துயரில் துவளும் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் என் ஆறுதல் அடங்கிய ஸலாத்தினை தெரிவித்து கொள்கிறேன்.அஸ்ஸலாமு அழைக்கும்!
அல்லாஹ் அனைத்தும் அறிந்த்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross