தேர்வுத்துறை அதிகாரிகளே ! posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[22 April 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 4084
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
அன்பு மாணவ மணிகளே!
பன்னிரண்டாம் வகுப்புக்கான கணிதப்பாட தேர்வில் கேட்கப்பட்ட சில கேள்விகள் குழப்பமாக உள்ளதை விசாரித்த அதிகாரிகள் மாணவர்கள் பாதிக்கப் படக்கூடாது என்பதற்காக பரீட்சைத் தாள்களை திருத்தும் ஆசிரியர்களுக்கு, அக்கேள்விகளை மாணவர்கள் முழுவதுமாக தீர்க்காவிட்டாலும், தவறாக பதில் எழுதியிருந்தாலும், அதற்குரிய மதிப்பெண்களை வழங்கும்படி அறிவுறுத்தப்பட்டிருப்பதாக நாளிதழில் வெளியாகி இருப்பது மாணவர்களுக்கு நல்ல செய்திதான்.
---------------------------------------
என்னதான் நல்ல செய்தியாக இருந்தாலும் கேள்வி குழப்பமாக இருக்கிறதே! ஒன்றும் புரியவில்லையே!! எதையாவது எழுதினால் தவறாகிவிடுமோ என்று நினைத்து விட்டிருந்தால் அந்த மாணவர்களின் கதி என்னாவது ?
நல்ல வேளை சகோதரர் சாளை. ஜியாவுதீன் அவர்களின் முன்னெச்சரிக்கையான யோசனை இந்த காயல்பட்டணம்.காம் மூலம் பல மாணவர்களுக்கு பயன்பட்டிருக்கும் அல்ஹம்துலில்லாஹ்.
சகோதரர் சாளை.ஜியாவுதீன் நல்ல சிரிப்பாக எழுதுவதாகத்தான் நினைத்தேன் மாஷா அல்லாஹ்! சிறப்பாகவும், பயனுள்ளதாகவும் எழுதுகிறார் தொடரட்டும் அவரது சீரிய பணி.
--------------------------------------
தேர்வுத்துறை அதிகாரிகளே !
மனிதர்களுக்கு மறதிகள் வரும், தவறுகள் வரும் அது இயற்கைதான். இருந்தாலும் இந்த கேள்வித் தாள்களை தயாரிப்பது தனி ஒருவர் மட்டுமல்லவே! ஒரு குழுவாகவல்லவா கேள்வித் தாள்களை தயாரிப்பீர்கள் எங்ஙனம் தவறுகள் வரும்?
இந்த மாதிரியான குழப்பங்கள் வராதவாறு தயாரித்து அதன் மூலம் வருங்கால மாணவர்களின் எதிர் காலம் பாதிக்காதவாறு பார்த்துக்கொள்வது உங்களது கடமையாகும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross