Re:...அவர்கள் நம் எல்லோருக்கும் தாய் posted bymackie noohuthambi (kayalpatnam)[03 June 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 40841
”அன்னை சிந்தும் கண்ணீரெல்லாம் அவனால்தான் பன்னீர் ஆகும்
ஆசைதரும் கனவுகளெல்லாம் அவனால்தான் நனவுகளாகும்”
கலவா சகோதரர்கள் அரபகத்தில் பணி புரிந்தாலும் அவர்களால் பணி பெற்றவர்கள் அதிகம் உண்டு. அவர்களால் பயன்பெற்றவர்கள் அதிகம் உண்டு. அந்த நல்ல உள்ளங்களெல்லாம் கலவா சகோதரர்களை வாழ்த்துவார்கள். ஆனால் அவர்களை பெற்றெடுத்த தாய்தான் இந்த உதவும் கரங்களை அப்படி உயர்த்தியவர்கள் கண் துஞ்சாது உடல் நலம் பாராது இவர்களை வளர்த்தார்கள் அவள் கனவுகளை இவர்கள் நனவுகளாக்கினார்கள் அவர்கள் சிந்திய கண்ணீரை இவர்கள் பன்நீராக்கினர்கள் என்பதால் அவர்களின் தாயாருக்கும் நாம் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் நல் அமல்களை பொருந்தி கொள்வானாக அவர்கள் குற்றங்களை மன்னிப்பானாக அவர்கள் மண்ணறையை வெளிச்சமாக்கி வைப்பானாக அவர்களுக்கு மேலான சுவர்க்க வாழ்வை நசீபாக்கி வைப்பானாக என்று து ஆ செய்யும் அதே வேளை என்னதான் வயதானாலும் ஒரு தாயை இழப்பது – ஒரு குடும்பத்தின் தலைவியை இழப்பது அந்த குடும்பத்தினருக்கு பெரும் கவலையாகவே இருக்கும். அவர்கள் எல்லோருக்கும் அல்லாஹ் நல்ல பொறுமையை கொடுத்தருள் புரிவானாக.
அமல்கள் ஆயுள்கள் கணக்கிடப்படும் ஒரு புனித நாளில் அவர்கள் இந்த மண்ணை விட்டு மறைந்திருக்கிறார்கள். அவர்களை அல்லாஹ் கபூல் செய்வானாக,
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross