Re:...எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது... posted bymackie noohuthambi (kayalpatnam)[16 June 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 40997
எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது அது எந்த தேவதையின் குரலோ.....
எங்கிருந்தோ ஒரு ஒளி வந்தது அது எந்த வானத்து
ஒளியோ...
அந்த ஒலியும் ஒளியும் ஒரே இடத்திலிருந்துதான் வந்தது அதுதான் அல்லாஹ்வின் தலைமை பீடம்.தித்திக்கும் திருமறை எத்திக்கும் மணம் பரப்பும் ஒரு அற்புத பொக்கிஷம்.
ஒரு இடையன் - சிறுவன்.தன் எஜமானனின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறான். நபிகள் நாயகம் அவனருகில் சென்று தனக்கு அந்த ஆடுகளிலிருந்து பால் கறந்து கேட்கிறார்கள். எனக்கு ஆட்டை மேய்க்கத்தான் உரிமை உள்ளது, பால் கறந்து கொடுக்க அனுமதி இல்லை என்கிறான். அப்படியானால் மடுவே இல்லாத ஒரு ஆட்டை காட்டு அதிலிருந்து நான் பால் கறந்து குடித்துக் கொள்கிறேன் என்கிறார்கள் நபிகள் நாயகம். அவன் சம்மதிக்கிறான். நபிகள் நாயகம் அப்படி ஒரு ஆட்டின் முன் நின்று ஏதோ உச்சரிக்கிறார்கள் பின்னர் பால் கறக்கிறார்கள். அவர்களுடன் சென்ற நபி தோழர் ஒருவரும் இதை பார்க்கிறார்கள். சிறுவனும் பார்க்கிறான். மூவருமே வயிறு நிறைய பால் அருந்தியபின் மீண்டும் நபிகள் நாயகம் அந்த ஆட்டினை தொட்டு ஏதோ உச்சரிக்கிறார்கள். அந்த ஆடு முந்திய நிலைக்கு மாறி விடுகிறது. சிறுவன் இது எப்படி சாத்தியமானது என்று கேட்கவில்லை. மாறாக நீங்கள் ஏதோ உச்சரித்தீர்களே அந்த மந்திரத்தை எனக்கும் சொல்லி தாருங்கள் என்று கேட்கிறான். சிறுவனின் புத்திக் கூர்மையை கண்ட நபிகள் நாயகம் அவர்கள் அவனை தன் வயமாக்கிக் கொள்கிறார்கள். அந்த சிறுவன் நபிகளாரின் பாசறையில் பட்டை தீட்டப் படுகிறான். அப்துல்லாஹிப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு என்று பரிணாமம் பெறுகிறான். திருமறையை அதன் அட்சரம் மாறாமல் அது எவ்வாறு இறங்கியதோ அப்படியே ஓதக் கேட்க வேண்டு மென்றால் அப்துல்லாஹிப்னு மஸ்ஊத் அவர்களை ஓத சொல்லுங்கள் என்று நபிகள் நாயகம் சொல்வதாக இஸ்லாமிய குறிப்பேடுகள் தெரிவிக்கின்றன.
இதிலிருந்து இரண்டு விஷயங்கள் தெளிவாகின்றன..ஒன்று அந்த சிறுவனின் ஆளுமை - அந்த சிறுவனின் கூர்மையான கேள்வி ஞானம், இந்த இரண்டுமே நிறையப்பெற்ற குடும்ப பின்னணியில் வளர்ந்த பிள்ளை இப்படித்தான் இருக்கும். சகோதரி ஷுரபா சாதிக்கா ஹாபிலா அவர்களுக்கு மக்கி ஆலிம் குடும்பத்தினரின் வாழ்த்துக்கள்.
வீட்டுக்கு ஒரு ஹாபில் உருவாக வேண்டும் என்ற எங்கள் அன்பு தந்தை மக்கி ஆலிம் அவர்களின் ஆசை அவர்கள் பேத்திமார்களையும் ஹாபிலாக்களாக களம் கண்டது.அந்த பேத்திகளில் ஒரு பெண்மணி இதே முஸ்தபா - சாதிக்கா தம்பதியர்களின் இன்னொரு மருமகள் - முஈனுதீன் அவர்களின் மனைவி பாத்திமா முஸ்தலிபா ஹாபிலா அவர்கள்.. கேட்க கேட்க இனிக்கிறது. இதயம் பனிக்கிறது. ஆனந்த கண்ணீர் வடிகிறது. மாஷா அல்லாஹ்.
உங்கள் கடைக் கண் பார்வையில் நாங்கள் சுவர்க்கம் செல்வதற்கு ஆசிக்கிறோம். அல்லாஹ் கபூல் செய்வானாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross