Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:59:55 AM
திங்கள் | 9 டிசம்பர் 2024 | துல்ஹஜ் 1957, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0012:1315:3318:0419:17
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:21Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:52
மறைவு17:59மறைவு00:23
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0605:3205:58
உச்சி
12:10
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2118:4819:14
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16085
#KOTW16085
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஜுன் 16, 2015
அமெரிக்காவில் காயல் மாணவி ‘ஹாஃபிழத்துல் குர்ஆன்’ பட்டம் பெற்றார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 6504 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (13) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அமெரிக்காவில் வசிக்கும் காயல்பட்டினத்தைச் சேர்ந்த 12 வயது மாணவி ஷுரஃபா ஸாதிகா, திருமறை குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்து, ‘ஹாஃபிழத்துல் குர்ஆன்’ ஸனது - பட்டம் பெற்றுள்ளார்.

இவர், காயல்பட்டினம் எல்.கே.துவக்கப் பள்ளிகளின் முன்னாள் தாளாளரும், கே.ஏ.மேனிலைப்பள்ளியின் முன்னாள் தலைவருமான நாவலர் ஹாஜி எல்.எஸ்.இப்றாஹீமின் பேத்தி மகளும், ஐக்கிய விளையாட்டு சங்க முன்னாள் செயலாளர் ஹாஜி பாளையம் எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா, ஹாஜி எம்.டீ.முத்து மொகுதூம் ஆகியோரின் பேத்தியும், அமெரிக்கா நியூஜெர்ஸி மாகாணத்தில் வசிக்கும் ஏ.எம்.தவ்ஃபீக் - எம்.எம்.முஃப்லிஹா தம்பதியின் மகளும், காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் துணைச் செயலாளர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீயின் சகோதரி மகளுமாவார்.

இம்மாணவியுடன், இன்னும் இரண்டு மாணவியர், ஐந்து மாணவர்கள் இவ்வாண்டு ஹாஃபிழ் பட்டம் பெற்றுள்ளனர். இம்மாதம் 13ஆம் நாளன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், பள்ளி நிர்வாகத்தின் சார்பில் இம்மாணவ-மாணவியருக்கு நினைவு கேடயம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.



நியூஜெர்ஸி - பிஸ்காட்டவே (PISCATAWAY) நகரில் இயங்கி வரும் ‘அன்னூர் - தாருல் ஹுதா’ அகடமி எனும் இஸ்லாமிய பள்ளிக்கூடத்தில் கே.ஜி. வகுப்பிலிருந்தே படித்து வரும் மாணவி ஷுரஃபா ஸாதிகா, நடப்பாண்டில் ஆறாம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.

இப்பள்ளியில் வாரத்தில் ஐந்து நாட்களும் நடைபெற்று வரும் முழு நேர அகடமிக் படிப்பு, அரபி, இஸ்லாமிய பாடங்கள், குர்ஆன் மனனம் (ஹிஃப்ழ்) படிப்பு முழு நேரமாக மாணவ மாணவியருக்கு தனித்தனி பிரிவாக நடத்தப்பட்டு வருகிறது. இப்பள்ளியின் ஹிஃப்ழ் பிரிவு துவங்கப்பட்டது முதல் இதுவரை 43 மாணவ-மாணவியர் திருமறை குர்ஆனை முழுமையாக மனனம் செய்து ஹாஃபிழ் / ஹாஃபிழாவாக உருவாகியுள்ளனர்.

மாணவி ஷுரஃபா ஸாதிகா முழு நேர படிப்பு மற்றும் குர்ஆன் மனனம் இரண்டையும் சற்றும் தரம் குறையாமல் நல்ல மதிப்பெண்களுடனும், முழு முயற்சியுடனும், பெற்றோர் ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்புடனும் படித்து, இப்போது ஹாஃபிழாவாக தேர்ச்சி பெற்று அவர்களின் குடும்பத்திற்கும், பள்ளி நிர்வாகத்திற்கும், சொந்த ஊரான காயல்பட்டினத்திற்கும் அளவில்லா பெருமை சேர்த்துள்ளதாகவும், இதே பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வரும் இவரது தங்கை ரஹீஃபா ராபியா, வரும் கல்வியாண்டில் குர்ஆன் மனனப் பிரிவில் பயில இணைந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

மூன்றாம் வகுப்பிலிருந்து துவங்கிய இம்மாணவியின் ஹிஃப்ழ் மனனம், நான்கு ஆண்டுகளில் நிறைவுற்றுள்ளது. இப்பள்ளியில் ஆண்டுதோறும் நடைபெறும் கிராஅத் போட்டிகள் அனைத்திலும் தனது இனிமையான குரலால் தஜ்வீதுடன் ஓதி தொடர்ச்சியாக வெற்றி கண்டு, பரிசுகள் பல பெற்றுள்ளார். 2012ஆம் ஆண்டு கன்னட்டிகட் (CONNECTICUT) மாநிலத்தில் நடைபெற்ற அனைத்து அமெரிக்க முஸ்லிம்கள் மாநாட்டில், வயது வாரியாக நடைபெற்ற குர்ஆன் கிராஅத் போட்டியில், மாணவி ஷுரஃபா ஸாதிகா முதலிடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.



பட்டமளிப்பு விழாவின்போது, மாணவி ஹாஃபிழா ஷுரஃபா ஸாதிகா ஓதிய குர்ஆன் வசனங்களின் ஒலிப்பதிவை, https://youtu.be/W2wSapyPasE என்ற இணைப்பில் சொடுக்கிக் கேட்கலாம்.

தகவல் & படங்கள்:
A.M.தவ்ஃபீக் B.E.,
நியூஜெர்ஸி, அமெரிக்கா.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. வாழ்த்துக்கள்
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam) [16 June 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 40993

‘ஹாஃபிழத்துல் குர்ஆன்’ பட்டம் பெற்ற மாணவிக்கும் அவர்களின் பெற்றோருக்கும் வாழ்த்துக்கள் - மேலும் பல சன்மார்க்க விருதுகளை இம்மாணவி பெற பிராத்திக்கிறேன் - ஆமின்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. மாஷாஅல்லாஹ்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [16 June 2015]
IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 40995

மாஷாஅல்லாஹ்!புலிக்கு பிறந்தது பூனையானசரித்திரமில்லை! மீன்குஞ்சுக்கு நீந்தத்தெரியுமா என்று எவரும் கேட்பதுமில்லை!

வல்ல இறையோனின் வனப்புமிகு திருமறையை மனனம் செய்வதையே வழமையாக கொண்ட வாழையடி வாழையாக ஒளிர்வு பெரும் பாரம்பரிய குடும்பத்தார்களின் ஒரு பிஞ்சுள்ளம் திருமறை மனனம் என்ற தன்னாற்றல் திறமையில் எத்தனையோ ஆயிர மயில்களுக்கப்பால் உள்ள ஒர் இடத்தில் மாணிக்கமாய் மின்னுகிறது அல்ஹம்திலில்லாஹ்!

இந்த மாணிக்கம் மிளிர பட்டைதீட்டியது தன் பெற்றோராக இருக்கலாம்,அல்லது தங்கள் பாரம்பரிய குடும்ப இறைநெறி குலச்செயலில் ஒன்றாக இருக்கலாம் எப்படி இருப்பினும் அது எந்த இடத்தில் மின்னியதென்பதுதான் முக்கியம்!

இந்த உலகத்தில் நாங்கள்தான் நாகரீகத்தின் உச்சாணி என்று மார்தட்டிக்கொண்டும்,எங்கு திரும்பினும் கலாச்சார சீரழிவுகளால் சூழப்பட்டும் அந்த அருவருப்புக்களை அசிக்கப்படாமல் அரங்கேற்றிக்கொண்டிருக்கும் அமெரிக்க கண்டத்தின் ஒர் மூலையில்,நம்முயிரினும் மேலான புனித மார்க்கத்தின் திறவு கோளான திருமறையின் மனனத்தையும், அதை அரங்கேற்றிய சான்றிதழையும் பெற்றதென்பது அவ்வளவு சாதாரண காரியமா?

இஸ்லாம் பட்டமரமாக எங்கள் நாட்டிலுள்ளது,அது எங்கள் இதையத்தில் கற்பாறை போன்றது என்று எக்களிப்போருக்கு மத்தியில்,அந்த பட்டமரத்திலும் பூ பூக்க வைக்கும் அக்கற்பாறையிலும் நீர் சுரக்கசெயும் சாதனை முயற்சியை முடிக்கி வைத்து,புண்ணிய மார்க்க வழிகோலுக்கு வித்திட்ட வாஞ்சைமிகு ஷுரஃபா சாதிகா சகோதிரியே, நீ எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உதவியால் எல்லா நலமும்,வளமும் பெற்று வாழவ்வங்கு வாழ்ந்துயுர்வாயாக!ஆமீன்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

வாழ்த்தும் சகோதரன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது...
posted by mackie noohuthambi (kayalpatnam) [16 June 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 40997

எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது அது எந்த தேவதையின் குரலோ.....
எங்கிருந்தோ ஒரு ஒளி வந்தது அது எந்த வானத்து ஒளியோ...

அந்த ஒலியும் ஒளியும் ஒரே இடத்திலிருந்துதான் வந்தது அதுதான் அல்லாஹ்வின் தலைமை பீடம்.தித்திக்கும் திருமறை எத்திக்கும் மணம் பரப்பும் ஒரு அற்புத பொக்கிஷம்.

ஒரு இடையன் - சிறுவன்.தன் எஜமானனின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறான். நபிகள் நாயகம் அவனருகில் சென்று தனக்கு அந்த ஆடுகளிலிருந்து பால் கறந்து கேட்கிறார்கள். எனக்கு ஆட்டை மேய்க்கத்தான் உரிமை உள்ளது, பால் கறந்து கொடுக்க அனுமதி இல்லை என்கிறான். அப்படியானால் மடுவே இல்லாத ஒரு ஆட்டை காட்டு அதிலிருந்து நான் பால் கறந்து குடித்துக் கொள்கிறேன் என்கிறார்கள் நபிகள் நாயகம். அவன் சம்மதிக்கிறான். நபிகள் நாயகம் அப்படி ஒரு ஆட்டின் முன் நின்று ஏதோ உச்சரிக்கிறார்கள் பின்னர் பால் கறக்கிறார்கள். அவர்களுடன் சென்ற நபி தோழர் ஒருவரும் இதை பார்க்கிறார்கள். சிறுவனும் பார்க்கிறான். மூவருமே வயிறு நிறைய பால் அருந்தியபின் மீண்டும் நபிகள் நாயகம் அந்த ஆட்டினை தொட்டு ஏதோ உச்சரிக்கிறார்கள். அந்த ஆடு முந்திய நிலைக்கு மாறி விடுகிறது. சிறுவன் இது எப்படி சாத்தியமானது என்று கேட்கவில்லை. மாறாக நீங்கள் ஏதோ உச்சரித்தீர்களே அந்த மந்திரத்தை எனக்கும் சொல்லி தாருங்கள் என்று கேட்கிறான். சிறுவனின் புத்திக் கூர்மையை கண்ட நபிகள் நாயகம் அவர்கள் அவனை தன் வயமாக்கிக் கொள்கிறார்கள். அந்த சிறுவன் நபிகளாரின் பாசறையில் பட்டை தீட்டப் படுகிறான். அப்துல்லாஹிப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு என்று பரிணாமம் பெறுகிறான். திருமறையை அதன் அட்சரம் மாறாமல் அது எவ்வாறு இறங்கியதோ அப்படியே ஓதக் கேட்க வேண்டு மென்றால் அப்துல்லாஹிப்னு மஸ்ஊத் அவர்களை ஓத சொல்லுங்கள் என்று நபிகள் நாயகம் சொல்வதாக இஸ்லாமிய குறிப்பேடுகள் தெரிவிக்கின்றன.

இதிலிருந்து இரண்டு விஷயங்கள் தெளிவாகின்றன..ஒன்று அந்த சிறுவனின் ஆளுமை - அந்த சிறுவனின் கூர்மையான கேள்வி ஞானம், இந்த இரண்டுமே நிறையப்பெற்ற குடும்ப பின்னணியில் வளர்ந்த பிள்ளை இப்படித்தான் இருக்கும். சகோதரி ஷுரபா சாதிக்கா ஹாபிலா அவர்களுக்கு மக்கி ஆலிம் குடும்பத்தினரின் வாழ்த்துக்கள்.

வீட்டுக்கு ஒரு ஹாபில் உருவாக வேண்டும் என்ற எங்கள் அன்பு தந்தை மக்கி ஆலிம் அவர்களின் ஆசை அவர்கள் பேத்திமார்களையும் ஹாபிலாக்களாக களம் கண்டது.அந்த பேத்திகளில் ஒரு பெண்மணி இதே முஸ்தபா - சாதிக்கா தம்பதியர்களின் இன்னொரு மருமகள் - முஈனுதீன் அவர்களின் மனைவி பாத்திமா முஸ்தலிபா ஹாபிலா அவர்கள்.. கேட்க கேட்க இனிக்கிறது. இதயம் பனிக்கிறது. ஆனந்த கண்ணீர் வடிகிறது. மாஷா அல்லாஹ்.

உங்கள் கடைக் கண் பார்வையில் நாங்கள் சுவர்க்கம் செல்வதற்கு ஆசிக்கிறோம். அல்லாஹ் கபூல் செய்வானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...அமெரிக்க
posted by hylee (colombo) [16 June 2015]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 40998

அன்பு செல்வத்துக்கு வாழ்த்துக்கள்.பெற்றோர்க்கும் அல்லாஹ்வின் அருள் பொழியட்டும் ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. மாஷா அல்லாஹ் மப்ரூக்.
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [16 June 2015]
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40999

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இறையருள் நிறைக.

மாஷா அல்லாஹ் நல்லகுரல்வளம்பொருந்திய ஒருகுறிஞ்சியின் காலமேயானமாணவி உலகக்கல்வியோடு இறைமறையையும் மனனம்செய்து சாதனைசெய்திருப்பது மனம்மகிழ்வுதருகிறது அல்ஹம்துலில்லாஹ்.

இன்ஷா அல்லாஹ் மென்மேலும் சாதனைப்பட்டியல்கள்தொடரவும் வாழ்வில் எல்லா நலவலங்களும்பெற்று நிம்மதியுடன் நீடியஆயுள்வாழ உங்களையும் உங்கள்பெற்றோர் உட்பட உங்களின் இவ்வெற்றிக்குத்துணைபுரிந்த அனைவரையும்,வாழ்த்தி துஆச்செய்கிறோம் ஆமீன்.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...வாழ்த்துக்கள்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [16 June 2015]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 41000

மாஷா அல்லாஹு .....

வல்ல நாயனின் அரும் மறையாம் புனித மிக்க திரு குர் ஆணின் அழகிய வசனங்களை தனது மனதில் பதிய வைத்து , மனனம் செய்து ஹாஃபிழத்துல் குர்ஆன்’ பட்டம் பெற்ற இந்த அருமையான இளம் ஹாபிழா அவர்களுக்கு எனது மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள் ..

இன்ஷா அல்லாஹு .. உங்களை போல எங்கள் பிள்ளைகளுக்கும் வல்ல நாயன் இந்த அருமையான பாக்கியங்களை & நசீபை தந்து அருள்வானாக . ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by MAC.Mujahith (Mumbai) [16 June 2015]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 41001

மாஷா அல்லாஹ்..." அருமையிலும் அருமை..." பெருமையிலும் பெருமை நம் ஊருக்கு ..."


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Congradulations...
posted by Muhammad Sulaiman (Chennai) [16 June 2015]
IP: 220.*.*.* India | Comment Reference Number: 41002

Masha Allah.. Greetings to the Young and Skilled Hafizul Quran Shurafa and her Family Members. I am Very much happy on seeing this good news. May Allah increase her Memorizing Power and give her continuous Success in her Future Career and to become an Aalima soon. Aameen.

With Best Wishes,
Sulaiman
Software Testing Engineer- Team Lead,
Chennai.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [17 June 2015]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41005

மாஷா அல்லாஹ்..மாஷா அல்லாஹ்.

இச்செய்தியை படித்ததும், ஆடியோவை கேட்டதும் உடல் புல்லரித்து, மனது நிறைந்த சந்தோசம் உண்டானது.

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

வல்ல அல்லாஹ் வாழ்வில் எல்லா வளங்களையும் வழங்கி, இரு உலகிலும் பிரமிக்கக்கூடிய வெற்றியை தருவானாக.

பெற்றோர் மற்றும் குடும்பத்தார்களுக்கும் கூடுதல் பாராட்டுக்கள்.

தம்பி தவ்ஃபீக், இனி வாங்கக்கூடிய பரிசுகளையும் கேடயங்களையும் வைக்க ஒரு பெரிய இடத்தை இப்போவே ரெடி பண்ணி வையுங்க. நாங்களும் பார்க்கவும் பாராட்டவும் தயாராகி விட்டோம்.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by Fareed (Dubai) [17 June 2015]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41007

மாஷா அல்லாஹு .....

வல்ல நாயனின் அரும் மறையாம் புனித மிக்க திரு குர் ஆணின் அழகிய வசனங்களை தனது மனதில் பதிய வைத்து , மனனம் செய்து ஹாஃபிழத்துல் குர்ஆன்’ பட்டம் பெற்ற இந்த அருமையான இளம் ஹாபிழா அவர்களுக்கு எனது மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள் ..

இன்ஷா அல்லாஹு .. உங்களை போல எங்கள் பிள்ளைகளுக்கும் வல்ல நாயன் இந்த அருமையான பாக்கியங்களை & நசீபை தந்து அருள்வானாக . ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [17 June 2015]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41008

அஸ்ஸலாமு அலைக்கும்

அருமை 'குழந்தைக்கு ''' எங்களின் அன்பான நல் வாழ்த்துக்கள் .......தொடர்ந்து தங்களின் இது போன்ற நம் மார்க்க .... சம்பந்தமான ....சாதனைகள் தொடரட்டும் ....

வல்ல இறைவன் தங்களின் & தங்கள் பெற்றோரின் ஆயுளை சிறப்பாக்கி அருள் வானாகவும் ஆமீன் ......

அருமை குழந்தையை கொண்டு நமது ஊருக்கும் பெருமையே ....... வஸ்ஸலாம்

K.D.N. MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. பாராட்டுக்கள்
posted by Salai Sheikh Saleem (Dubai) [17 June 2015]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41011

நமதூரில் எத்தனையோ குர்ஆன் மனனம் செய்ய மதரசாக்கள் இருந்தும் நம்மவர்கள் குறைவாகவே காணப்படுகிறார்கள் என்கிற மனக்குறை இருக்கும் கால கட்டத்தில்,

நாகரீகத்தின் உச்சாணியில் இருக்கும் அமெரிக்காவில் இருந்துகொண்டு இறையளித்த மறையை நெஞ்சில் ஏந்தி மனனம் செய்து புனித ஹாபிழ் பட்டமும் வாங்கிய சிறுமி நமதூருக்கே பெருமை தேடிதந்திருக்கிறார்.

பாராட்டுக்கள் நமதூர் வாசிகளின் சார்பில்....

பாடம்:

எந்த கண்டத்தில் வாழ்ந்தாலும், பிள்ளைகளை நாம் வளர்க்கும் விதத்தில் வளர்த்தால், எந்தக்குழந்தையும் நல்லக் குழந்தைகளாக ஆளாக்க முடியும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. வாழ்த்துக்கள் !!
posted by Salai.Mohamed Mohideen (Philadelphia) [17 June 2015]
IP: 144.*.*.* United States | Comment Reference Number: 41015

இந்நிகழ்வில் கலந்துகொண்டது எங்களுக்கு சந்தோசத்தை தந்தது என்பதனை விட... அமெரிக்காவில் வசிக்கும் காயலர்களாகிய எங்களுக்கெல்லாம் பெருமையை தேடி தந்தது என்பதே மிகச் சரியாக இருக்கும். இது அவ்வளவு எளிதான காரியமல்ல ... அதுவும் அமெரிக்காவில். மென்மேலும் வெற்றியை ஷுரஃபாவுக்கு வல்ல இறைவன் தந்தருள்வானாக !!

" எந்த கண்டத்தில் வாழ்ந்தாலும், பிள்ளைகளை நாம் வளர்க்கும் விதத்தில் வளர்த்தால், எந்தக்குழந்தையும் நல்லக் குழந்தைகளாக ஆளாக்க முடியும்" - மிகவும் சரியான வார்த்தை. இம்மாணவியின் பெற்றோர் விடயத்திலும் நாங்கள் கண்கூட கண்ட நிதர்சன உண்மையும் கூட. வல்ல இறைவன் இது போன்ற பாக்கியத்தை எல்லா பெற்றோர்களுக்கும் தந்தருள்வானாக !!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved