எதிர்வரும் ரமழான் - நோன்பு மாதத்தை முன்னிட்டு, சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அபூதபீ காயல் நல மன்றங்கள் இணைந்து, காயல்பட்டினத்திலுள்ள ஏழை-எளிய 168 குடும்பங்களுக்கு, தலா ரூபாய் 2 ஆயிரத்து 597 மதிப்பில், மொத்தம் ரூபாய் 4 லட்சத்து 36 ஆயிரத்து 296 ரூபாய் செலவில் - 34 வகையான அத்தியாவசிய சமையல் பொருட்கள், உதவியாக வழங்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூர் காயல் நல மன்றம் சார்பில், 118 குடும்பங்களுக்கு 3 லட்சத்து 6 ஆயிரத்து 446 ரூபாய் செலவிலும்,
அபூதபீ காயல் நல மன்றம் சார்பில் 50 குடும்பங்களுக்கு 1 லட்சத்து 29 ஆயிரத்து 850 ரூபாய் செலவிலும் இப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூர் காயல் நல மன்ற உள்ளூர் பிரதிநிதி கே.எம்.டி.சுலைமான், அதன் செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் எம்.எஃப்.ஃபஸல் இஸ்மாஈல், சமூக ஆர்வலர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை, சோனா மானாத்தம்பி ஆகியோரிணைந்து அப்பொருட்களை பயனாளிகளின் இல்லங்களுக்குத் தேடிச் சென்று வழங்கியுள்ளனர்.
தகவல் & படங்கள்:
K.M.T.சுலைமான்
உள்ளூர் பிரதிநிதி - சிங்கை காயல் நல மன்றம்
சிங்கப்பூர் காயல் நல மன்றம் சார்பில் இதற்கு முன் அத்தியவாசிய சமையல் பொருட்கள் வினியோகிக்கப்பட்ட செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
அபூதபீ காயல் நல மன்றம் சார்பில் இதற்கு முன் அத்தியவாசிய சமையல் பொருட்கள் வினியோகிக்கப்பட்ட செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
சிங்கப்பூர் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
அபூதபீ காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |