காயிதேமில்லத் முஹம்மத் இஸ்மாஈல் ஸாஹிப் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், கல்வி தின நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீகை நிறுவி, வழிநடத்திய கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் முஹம்மத் இஸ்மாயில் ஸாஹிப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் பிறந்த நாளான ஜூன் 05ஆம் தேதியை, கல்வி தினமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் செயல்திட்டங்களுள் ஒன்றாகும்.
அந்த அடிப்படையில், இவ்வாண்டின் கல்வி தின நிகழ்ச்சி, இம்மாதம் 10ஆம் நாள் புதன்கிழமையன்று, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், காயல்பட்டினம் சதுக்கைத் தெருவிலுள்ள அதன் அலுவலகமான தியாகி பி.எச்.எம்.முஹம்மத் அப்துல் காதர் மன்ஸிலில் கல்வி தின சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மவ்லவீ எஸ்.எஸ்.இ.காழி அலாவுத்தீன் ஆலிம் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். தலைமை தாங்கிய - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார். நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
நகரப் பிரமுகர் பாளையம் ஹபீப் முஹம்மத், முஸ்லிம் லீக் நகர நிர்வாகி எம்.எல்.ஷேக்னா லெப்பை, மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப் ஆகியோர், கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் முஹம்மத் இஸ்மாஈல் ஸாஹிப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் சேவைகளை நினைவுகூர்ந்து கருத்துரையாற்றினர்.
இளைஞரணி நகர செயலாளர் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத் நன்றி கூற, துஆ - ஸலவாத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. இதில், கட்சியின் அங்கத்தினர் கலந்துகொண்டனர்.
காயிதேமில்லத் பிறந்த நாளை முன்னிட்டு கடந்தாண்டு (2014) நடைபெற்ற நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |