2015ஆம் ஆண்டு வீ-யுனைட்டெட் காயல் ப்ரீமியர் லீக் கால்பந்து சுற்றுப்போட்டிகள், இம்மாதம் 04ஆம் நாள் வியாழக்கிழமையன்று, காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் துவங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இச்சுற்றுப்போட்டியில் தேர்வாகாத வீரர்களுக்காக சிறப்புப் போட்டி நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
வீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் கால்பந்து 2015-ல் தேர்வாகாத வீரர்களுக்காக புதிய போட்டி!
வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் பெருமையுடன் நடத்தும் 7ஆம் ஆண்டு VMS Jewellers SilvOr கோப்பைக்கான கால்பந்து போட்டிகள் கடந்த 04ஆம் தேதி முதல், ஐக்கிய விளையாட்டுச் சங்கம் (USC) மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
இப்போட்டியில் பங்கேற்பதற்காக 200 வீரர்கள் விண்ணப்பித்திருந்தார்கள், இவர்களில் 104 வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டிருந்தார்கள், 96 வீரர்கள் தேர்வு செய்யப்படாமல் விடுபட்டிருந்தார்கள்.
விடுபட்ட வீரர்களுக்கு வாய்பளிக்கும் விதமாக வருகின்ற வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் புதிய போட்டி நடத்தப்பட உள்ளது. இப்போட்டியில் பங்கேற்க விரும்புகின்ற வீரர்கள் வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் - காயல் பிரிமியர் லீக் சுற்றுப்போட்டி குழுவினரை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். இப்போட்டியில் இவ்வருடம் காயல் பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் பங்கேற்ற வீரர்கள் பங்கேற்க இயலாது.வீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் கால்பந்து 2015-ல் தேர்வாகாத வீரர்களுக்காக புதிய போட்டி!
வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் பெருமையுடன் நடத்தும் 7ஆம் ஆண்டு VMS Jewellers SilvOr கோப்பைக்கான கால்பந்து போட்டிகள் கடந்த 04ஆம் தேதி முதல், ஐக்கிய விளையாட்டுச் சங்கம் (USC) மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
இப்போட்டியில் பங்கேற்பதற்காக 200 வீரர்கள் விண்ணப்பித்திருந்தார்கள், இவர்களில் 104 வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டிருந்தார்கள், 96 வீரர்கள் தேர்வு செய்யப்படாமல் விடுபட்டிருந்தார்கள்.
விடுபட்ட வீரர்களுக்கு வாய்பளிக்கும் விதமாக வருகின்ற வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் புதிய போட்டி நடத்தப்பட உள்ளது. இப்போட்டியில் பங்கேற்க விரும்புகின்ற வீரர்கள் வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் - காயல் பிரிமியர் லீக் சுற்றுப்போட்டி குழுவினரை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். இப்போட்டியில் இவ்வருடம் காயல் பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் பங்கேற்ற வீரர்கள் பங்கேற்க இயலாது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.ஜஹாங்கீர்
கடந்தாண்டு (2014) வீ-யுனைட்டெட் கால்பந்து சுற்றுப்போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
வீ-யுனைட்டெட் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |