2015ஆம் ஆண்டு வீ-யுனைட்டெட் காயல் ப்ரீமியர் லீக் கால்பந்து சுற்றுப்போட்டிகள், இம்மாதம் 04ஆம் நாள் வியாழக்கிழமையன்று, காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் துவங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏழாம் நாளன்று நடைபெற்ற போட்டிகளின் முடிவுகள் குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் பெருமையுடன் நடத்தும் 7ஆம் ஆண்டு VMS Jewellers SilvOr கோப்பைக்கான கால்பந்து போட்டிகள் கடந்த 04ஆம் தேதி முதல், ஐக்கிய விளையாட்டுச் சங்கம் (USC) மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
ஜூன் 10 அன்று காலை நடைபெற்ற முதல் போட்டியில் Canton Thunders அணியும், Knight Riders அணியும் விளையாடின. இதில் Knight Riders அணி 3 - 2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
Knight Riders அணிக்காக O.A.K. யாஸர் அரஃபாத் இரண்டு கோல்களையும், ஹனீஃபா ஒரு கோலையும் அடித்தனர். Canton Thunders அணிக்காக புஹாரி மற்றும் சுலைமான் தலா ஒரு கோல் அடித்தனர்.
இரண்டாவது போட்டியில் Kayal Chelsea அணியும், Strange Spikers அணியும் விளையாடின. இதில் Strange Spikers அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. அந்த அணிக்காக இப்றாஹீம் மற்றும் அபுசாலிஹ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
ஜூன் 11 அன்று காலை நடைபெற்ற முதலாவது போட்டியில் Gallery Birds அணியும், Kayal Chelsea அணியும் விளையாடின. இதில் Gallery Birds அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றனர். அந்த அணிக்காக சாஹூல் ஹமீது ஒருகோல் அடித்தார்.
இரண்டாவது போட்டியில் Knight Riders அணியும், Bangkok Ball Blasters அணியும் விளையாடின. இதில் இரண்டு அணிகளும் கோல் ஏதும் அடிக்காததால் போட்டி சமநிலையில் முடிவுற்றது.
மாலை நடைபெற்ற முதல் போட்டியில் Strange Spikers அணியும், Fi-Sky Boys அணியும் விளையாடின. இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால் போட்டி சமநிலையில் முடிவுற்றது. Strange Spikers அணிக்காக அஃப்ரஸ் ஒரு கோலையும், Fi-Sky Boys அணிக்காக லத்தீஃப் ஒரு கோலையும் அடித்தனர்.
இரண்டாவது போட்டியில் Canton Thunders அணியும், Janseva அணியும் விளையாடின. இதில் இரண்டு அணிகளும் இறுதி வரை கோல் ஏதும் அடிக்காததால் போட்டி சமநிலையில் முடிவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
M.ஜஹாங்கீர்
கடந்தாண்டு (2014) வீ-யுனைட்டெட் கால்பந்து சுற்றுப்போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
வீ-யுனைட்டெட் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |