காயல்பட்டினம் நகராட்சியின் சமீப நடப்புகளை பின்னணியாக கொண்டு, அதன் தலைவர் ஐ.ஆபிதா சேக் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கை - துண்டு பிரசுரங்களாக இன்று நகரில் விநியோகம் செய்யப்பட்டது:
முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்; (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்); ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்; எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்; மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்.
(AN-NISA 4.135)
2. Re:...சகோதரி ஆபிதா அவர்களுக்கு அல்லாஹ் அவர்களின் வேலைகளை இலேசாக்கி வைப்பானாக. posted byOmer Abdul Qadir (Chennai)[13 June 2015] IP: 182.*.*.* India | Comment Reference Number: 40959
அஸ்ஸலாமு அலைக்கும்....சகோதரி ஆபிதா அவர்களுக்கு அல்லாஹ் அவர்களின் வேலைகளை இலேசாக்கி வைப்பானாக. அவர்கள் படும்பாடு ஊர் மக்கள் அனைவருக்கும் தெரியும்.
இந்த உலக வாழ்க்கை யாருக்கும் நிரந்தரமானது அல்ல,மாறாக ஒரு சோதனைக்கூடம், மரணித்த பின் உள்ள மண்ணறை வாழ்வை நினைப்போம், மஹ்ஷர் தளத்தில் ஏற்படும் நிலைதனை நினைப்போம்.
இதனை அறிந்து நாம் நமது செயல்களை அல்லாஹ் நமக்கு எதை ஏவினானோ அதை செய்யக்கூடியவர்களாகவும் எதை தடுத்தானோ அதை தவிர்க்கக்கூடியவர்களாகவும் நம்மை நாம் மாற்றிக்கொள்வோமாக.
3. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[13 June 2015] IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40960
அஸ்ஸலாமு அலைக்கும்
நமது மரியாதைக்குரிய நகர் மன்ற .தலைவி அவர்களின் ....இந்த அறிக்கை ஒன்றே போதும் ....நம் ஊர் பொது மக்கள் முழுமையாக அவர்களை அறிந்து கொள்வதற்கு ......
மேடம் உங்களுக்கு வல்ல இறைவன் துணை அருள்வானகாவும் ஆமீன்....நம் ஊர் அனைத்து பொது மக்களின் முழுமையான ஆதரவு எப்போதும் தங்களுக்கு உண்டு .....நம் ஊர் மக்கள் தீய சக்திகளுக்கு ஒரு போதும் அடி பணியவே மாட்டார்கள் .......
தாங்கள் நமது ஊரின் நலனுக்காக எவ்வளவு கஷ்ட பட்டு ....பல ''''' இன்னல்களுக்கு '''' மத்தியில் ...நம் ஊர் மக்களுக்காக பல நல்ல செயல் திட்டங்கள் செய்தும் ,,, மேலும் செய்திடவும் தாங்கள் துணிந்து '' கடந்து வந்தீர்கள் என்பது இப்போது தான் பொது மக்களாகிய நாங்கள் அறிந்து ....தாங்கள் மீதான மரியாதையும் ,, பாசமும் ,, மேலும் அதிகரித்து விட்டது .......
இன்ஷா அல்லாஹ் ....அடுத்து வருகின்ற நம் ஊர் நகர் மன்ற தேர்தலில் தாங்கள் நிற்பீர்கள் ....நிச்சயம் நம் ஊர் பொது மக்கள் அனைத்து பணம் படைத்த & ஊழல் புரிகின்ற மற்றவர்களையும் + தீய சக்திகளையும் ஒட்டு மொத்தமாகவே முறியடித்து தங்களையும் ,, மற்றும் நல்லவர்களை தேர்வி செய்து நகர் மன்றத்துக்கு அனுப்பி நம் ஊரின் முன்னேற்றத்துக்கும் & நம் மக்கள் நல வாழ்வுக்கும் .... வழிவகுப்புவார்கள் இந்து தான் நடக்கும் ....
நம் ஊர் பொது மக்கள் தற்போது நன்கு உணர்ந்து விட்டார்கள் .....தீய சக்திகளின் சொல்லையும் ...பிரசுரத்தையும் ,, நம்புவதற்கு தயாராக இல்லை .......
>> அஞ்சுவதும் அடிபணிவதும் ஆண்டவன் ஒருவனுக்கே << உண்மைதான் .....அல்லாஹ் தங்களுக்கு எப்போதும் துணை நிர்பானாகவும் ஆமீன் .......
நம் ஊர் பொது மக்களின் பலம் ..& நம்பிக்கையும் ../ ஒத்துழைப்பும் .... .தங்களுக்கு எப்போதும் உண்டு .....
நம் ஊருக்கான பல நல்ல செயல் திட்டங்கள் ....வெற்றியுடன் தொடரட்டும் .......
4. Re:... posted bySHAIK SALAHUDEEN (DUBAI)[13 June 2015] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40962
மேடம் உங்களின் விளக்கத்தை பார்த்து எனக்கு அழுஹை வந்து விட்டது. இந்த அளவுக்கு உங்களின் திறமையான நிர்வாகத்தை குறை சொல்லும் குறை மதி மிக்க மாக்களின் (மக்களின்) அவதூறுகளை நாங்கள் நம்ப மாட்டோம்.அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் பணிகளுக்கு உதவி செய்யும் மற்ற உறுப்பினர்களுக்கும் கிருபை செய்வனஹா .ஆமீன்.
5. Re:... posted bySabeer (Bangalore)[13 June 2015] IP: 115.*.*.* India | Comment Reference Number: 40963
நகர்மன்றத்தலைவரும் சரி எங்களது 5வது வார்டு உறுப்பினரும் சரி. இருவருமே 5வது வார்டுக்குட்பட்ட மொகுதூம் தெருவைச் சார்ந்தவர்கள். ஆனால் கவலைக்குரிய விசயம் என்னவென்றால் இருவருமே 5வது வார்டைச் சார்ந்தவர்களாக இருந்தும் 5வது வார்டுக்கென்று எந்த ஒரு நலனும் இது நாள் வரை இந்த நகர்மன்றம் பொறுப்பேற்றது முதல் கிடைக்கப் பெறவில்லை.
நகர்மன்றம் பொறுப்பேற்று மூன்று வருடங்களுக்கு மேலாகிறது. இதுவரை 5வது வார்டுக்குட்பட்ட கோரிக்கையாக எதையும் கவுன்சிலர் முன் வைத்து தீர்மானம் நிறைவேற்றியதாக தெரியவில்லை. (செய்தியின் வாயிலாக அறிந்து கொண்டது தான். அப்படி ஏதாவது தீர்மானம் நிறைவேற்றியிருப்பின் அறியத்தரவும்).
இப்படியே நீங்கள் சண்டை பிடித்துக் கொண்டிருந்தால் மக்களுக்குப் பிரயோஜனமாக எதையும் செய்ய இயலாது. உங்களை மக்கள் தேர்ந்தெடுத்தது மக்களுக்காக உழைக்கத் தான் என்பதை நினைவில் கொண்டு செயல்படுங்கள்.
6. Re:... posted byS.S.JAHUFER SADIK (JEDDAH-K.S.A)[13 June 2015] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40968
வல்ல நாயன் ஒருவனே எல்லாம் அறிந்தவன். திரைக்கு மறைவில் நடப்பதையும் வெளியில் பகிரங்கமாக நடப்பதையும் அவனே அறிவான்.
தலைவியின் அறிக்கையை நம்புவதா? எனக்கு வாகனம் வாங்கும் தீர்மானத்தை நிறைவேற்ராததால் எஞ்சிய காலத்திலும் இந்நகர் மன்றத்தில் ஒரு வேலையையும் நடக்க விடமாட்டேன் என சூளுரைக்கும் தலைவி அவர்களின் வீடியோ கிளிப்பை நம்புவதா? அவனே எல்லாம் அறிந்தவன்.
எப்படியோ எஞ்சிய காலத்தில் நகருக்கு நல்லது நடக்க வல்லோன் அருள் புரிவானாக ஆமீன்.
7. Re:... posted bykamalmusthafa (abha.ksa)[13 June 2015] IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40970
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
நமது நகர் மன்றத் தலைவி ஐ .அபிதா சேக் அவர்களின் அறிக்கையை பார்த்தபின் நம்ஊர் மக்களுக்கு பயன் தரக்கூடிய எத்தனையோ நல்ல திட்டங்கள் செயல் படாமல் கிடப்பதும் அரசாங்கத்தால் நம் ஊர் திட்ட பணிகளுக்கு கிடைக்க பெற்ற பணம் கொள்ளை போக துனைநிற்கும் சீமான்களே கவனியுங்கள்
நம் துனியாவில் வரும்போது எதுவும் கொண்டுவரவில்லை துனியாவைவிட்டு போகும் பொது எதும்கொண்டுபோவதில்லை நம் கூட வருவது நாம் செய்த நல்ல அமல்கள் மட்டுதான்
நம் தவறான முறையில் தேடும் செல்வங்கள் ஏதும்நிலைப்பது இல்லை மனிதன் வாழ்க்கை மிக குறுகிய காலமே நமக்கு மறுமை என்று ஒன்று உண்டு அதை மனதில் வைத்து மக்களுக்கும் ஏழை களுக்கும் பயன் தரக்கூடிய எந்த காரியத்திற்கும் தடையாக இருக்காதிர்கள் மக்கள் உங்கள் மீது வைத்து இருக்கும் நம்பிக்கையை வீனாக்கிவிடாதிர்கள்
நம் ஊரில் எத்தனையோ அமைப்புகள் எத்தனையோ கச்சிகள் உள்ளன நகராச்சியின் உண்மை நிலை அறிந்து ஏன் கேள்வி கேற்க்கவில்லை ஏன் மற்ற வார்டு உறுப்பினர்கள் இதை பற்றி கேள்வி எழுப்பவில்லை
உங்களை தேர்ந் எடுத்த மக்களுக்கு நீங்கள் தரும் தண்டனையா இதற்கு வழிதான் என்ன மக்கள் கள்தான் பதில் சொல்லவேண்டும்
9. இது நம்மூரின் தலை நசீபு.! posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[13 June 2015] IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 40978
சகோதரர் முஹம்மது லெப்பை அவர்களே உங்கள் விருப்பத்தை ஒரு நகைசுவையாகவே நான் எடுத்து கொள்கிறேன்!
இப்பொழுது இந்த பெண்மணி படும்பாடு போதாதா? இன்னும் ஐந்து ஆண்டுகள் மென்மேலும் அனுபவிக்க வேண்டுமா? ஒரு முஸ்லிம் பெண் என்றுகூட பாராமல் அவர்மீது எப்படிப்பட்ட இழிவான வசனங்கள் வீசப்பட்டன.அவரின் உடை,நடை,பாவனை அனைத்தையும் அங்குலம் அங்குலமாக அடுத்த இனத்தவர் முதல் அந்த நகர்மன்றத்தாராலும் ,வெளியினராலும் விரசமான ரசனை சொட்ட சொட்ட செவிகளால் கேட்க முடியாத வார்த்தைகளால் வர்ணித்தார்களே அப்படிப்பட்ட அவமானங்களை சுமந்த பெண்மணிக்கு மேலும் ஐந்தாண்டுகளா?
ஒரு தலைவியை தார்மீகமாக எதிர்ப்பது ஜனநாயகம் .தரக்குறைவாய் விமர்சிப்பது என்பது என்ன?அப்படி என்னதை விமர்சித்து விட்டோம் என்று கேட்பவர்களே,உங்களுக்கு மேலே ஒருவன் ஒன்றுவிடாமல் பார்த்தவனாகவும் அறிந்தவனாகவும் இருக்கிறான் அவனுக்கு இன்றோ நாளையோ பதில் சொன்னால் போதும்!
நகராட்சி வேலைக்காக தன் சொந்த வாகனத்தையும், ஆட்டோவையும் உபயோகிக்கும் ஒரு மன்ற தலைவர் தனக்கு அரசாங்கம்அனுமதித்திருக்கும் உரிமையில் ஒரு வாகனத்தை வாங்க முனைவது,எந்த வகையில் தவறு?,
ஏதோ தலைவி பெரும் பாவமான காரியத்தை செய்யப்போகிறார் என்று பொங்கி எழுந்து,படைதிரண்டு இந்த பிரபஞ்சமே வெடித்து விடும் அபாயத்தில் இருப்பதுபோல் அலறுபவர்களை பார்க்கும்பொழுது அவர்களின் உள்நோக்கம் அப்பட்டமாக தெரிகிறது. நமக்கே வேதையாக இருக்கும் பொழுது சம்பந்தப்பட்ட தலைவி கொதித்தெழுவதில் என்ன தவறு இருக்க முடியும்!
அந்த கொதிப்பின் வெடிப்பால் வெளி வந்த வார்த்தைகள்தான் எனக்கெதிராக சதித்திட்டம் வகுத்து வாகனத்தை வங்க தடை செய்கிறீர்கள், இனிமேல் இங்கு எந்த காரியமும் எப்படி நடக்கும் என்பதை பார்ப்போம்,அதை எப்படி தடை செய்கிறேனென்று பாருங்கள் என்கின்ற வார்த்தைகள் வெறுப்பின் கொதிப்பின் உச்சாணியில் உதிர்ந்து விட்ட சொற்கள்!
அந்த ஒற்றைவார்தகளை பிடித்துக்கொண்டு பார்த்தீர்களா?பார்த்தீர்களா?ஊரை நாசம் பண்ணும் உதவாக்கரை தலைவியின் பேச்சை என்று ஊர் முழுவதும் விளம்பரம்! இந்த நிகழ்வுகளின் உண்மை நிலையை நடுநிலையானவர்களும்,நீதமானவர்களும் அறியாமளா போவார்கள்!
தலைவி அவர்கள் கொதித்து சொன்னாலும்,சாதாராணமாக சொன்னாலும் இறைவன் அறிய அவர்சொன்ன வார்த்தையில் எனக்கு உடன்பாடில்லை! அதே நேரம் தலைவி சொன்ன இந்த வார்த்தைகளைவிட எத்தனையோ நிகழ்வுகளாலும் ஈனத்தனமான,இரு காதுகளையும் பொத்தக்கூடிய கழிசடை வார்த்தைகளாலும் வருத்தெடுக்கப்பட்டவர்தான் இத்தலைவி
ஆனால் இந்த தலைவிக்கு எதிராக இமயமலை சக்திகளை ஒன்றுதிரட்டி அரசியல் தலைவர்கள் முதல்,அணையுடைந்த வெள்ளமென பாய்ந்த பணபலம் வரை அனைத்தையும் உபயோகித்து பார்த்தாகி விட்டது,அந்த பெண்மணியிடம் எந்த பருப்பும் வேகவில்லை,விழுந்து,விழுந்து வீழ்ந்ததுதான் மிச்சம்,ஆனால் என் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற ஒய்யாரக்கொண்டை ஓசையைத்தான் கேட்க முடிந்தது!
நமதூருக்கு விடிவு காலம்தான் எப்போது?அதை எப்போதும் யாராலும் கொடுக்க முடியாது.எவர் ஆட்சித்தலைவராக வந்தாலும் அவர் நிழலாதிக்க சக்த்தியின் கீழ்தான் இயங்கவேண்டும். அந்த ராஜாக்கள் கிழித்த கோட்டை தாண்ட முடியாது.அது தலைவராக இருந்தாலும்,அங்கத்தினராக இருந்தாலும் ஒரு அங்குலம் கூட நகர்ந்து இந்த நகரத்திற்கு நன்மை செய்திட முடியாது..இதே சிந்துபாத்து கதைதான் தொடரும் இது நம்மூரின் தலை நசீபு.அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும்.அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
11. Re:... posted byK.A.Mohamed Sulaiman (chennai)[15 June 2015] IP: 115.*.*.* India | Comment Reference Number: 40990
அஸ்ஸலாமு அலைக்கும்.
அல்லாஹ் உங்களுக்கு துணை இருப்பான். நீங்கள் தைரியமாக நம் ஊர் மக்களுக்கு சேவை புரியுங்கள். உங்களுக்கு வெற்றியைத் தருவான். அல்லாஹ் யாவரையும் நன்கு அறிந்தவன். வஸ்ஸலாம்.
12. Re:... posted byMAC.Mujahith (Mumbai)[15 June 2015] IP: 115.*.*.* India | Comment Reference Number: 40992
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹ்..."
இங்கு இந்த தலைப்பை பற்றி நான் என்ன சொல்ல நினைத்துக்கொண்டிருந்தேனோ அதை மிக தெள்ளத்தெளிவாக சகோதரர் முஹம்மது ஆதம் சுல்தான் இங்கு அவர் கருத்தை பதிந்திருக்கிறார்.."
அதுவே எனது ஆதங்கமும், கருத்தாகும்.." அல்லாஹ்வே இந்த சதிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பான்.." இன்ஷா அல்லாஹ்.."
13. நகர் மன்ற தலைவர் அவர்களே..! காசோலை குறித்து விரிவான விளக்கம் தாருங்களேன்..! posted byதமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam)[18 June 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41019
நகர்மன்ற தலைவர் அவர்களே..! கடந்த நிர்வாகத்தில் நகராட்சியில் முறைகேடாக பணியில் அமர்ந்து பிறகு தற்போதைய ஆணையரின் அதிரடி நடவடிக்கையால் பணி நீக்கம் செய்ய பட்ட நசீர் கான் என்ற தனி நபரின் பெயரில் கணினி வாங்கப்பட்டதாக விநியோகிக்கப்பட்ட 1 லட்சத்து 18 ஆயிரம் காசோலை குறித்து கொஞ்சம் விரிவான விளக்கம் தாருங்களேன்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross