2015ஆம் ஆண்டு வீ-யுனைட்டெட் காயல் ப்ரீமியர் லீக் கால்பந்து சுற்றுப்போட்டிகள், இம்மாதம் 04ஆம் நாள் வியாழக்கிழமையன்று, காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் துவங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நடைபெற்ற அரையிறுதிப் போட்டிகளில், Strange Spikers, Knight Riders அணிகள் வெற்றிபெற்று, இறுதிப்போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளன. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
இம்மாதம் 13ஆம் நாளன்று காலையில் நடைபெற்ற போட்டியில் Knight Riders அணியும், Fi-Sky Boys அணியும் விளையாடின. இதில் Knight Riders அணி 4 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் Knight riders அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் Bangkok Ball Blasters அணியும், Strange Spikers அணியும் விளையாடின. இதில் Strange Spikers அணியினர் 2 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றனர். அந்த அணிக்காக மஃரூஃப் மற்றும் இப்றாஹீம் தலா ஒரு கோல் அடித்தனர்.
அன்று மாலை நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் Gallery Birds அணியும், Knight Riders அணியும் விளையாடின. ஆட்டநேர முடிவில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் அடித்திருந்ததால் போட்டி சமநிலையில் முடிவுற்றது. எனவே சமநிலை முறிவுமுறை கடைபிடிக்கப்பட்டது இதில், Knight Riders அணி 4 - 2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.
இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் அணியினருக்கு ரூ.17 ஆயிரம் ரொக்கப் பரிசினை L.K.S. Gold House நிறுவனத்தினரும்,
இரண்டாம் இடம் பிடிக்கும் அணியினருக்கு ரூ.12 ஆயிரம் பரிசினை Vilak 2000 நிறுவனத்தினரும்,
அரையிறுதி போட்டி வரை முன்னேறிய அணிகளுக்கு தலா ரூ. 4 ஆயிரத்தினை Faams மற்றும் Blossoms நிறுவனத்தினரும் வழங்க உள்ளார்கள்.
மேலும் ஹாஜி VMS லெப்பை அவர்களின் நினைவாக நடைபெற்று வரும் நாக்கவுட் போட்டியில் வெற்றிபெறும் அணியினருக்கு ரூ. 2 ஆயிரம் பரிசினை V-United Exports நிறுவனத்தினரும்,
இரண்டாம் இடம் பிடிக்கும் அணியினருக்கு ரூ.1000 பரிசினை V-United Forex நிறுவனத்தினரும்,
அரையிறுதிக்கு தகுதிபெறும் அணியினருக்கு தலா ரூ.500 பரிசினை Faams நிறுவனத்தினரும் வழங்க உள்ளார்கள்.
இறுதிப் போட்டிகளை காண வரும் ரசிகர்களில் 50 நபர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, சிறப்பு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
இந்த பரிசுகளை, L.T.S. Gold House, J.J. Jewellers, A.K.M. Jewellers, Janseva மற்றும் Bismillah Agency ஆகிய நிறுவனங்கள் வழங்க உள்ளன.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
M.ஜஹாங்கீர்
கடந்தாண்டு (2014) வீ-யுனைட்டெட் கால்பந்து சுற்றுப்போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
வீ-யுனைட்டெட் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |