2015ஆம் ஆண்டு வீ-யுனைட்டெட் காயல் ப்ரீமியர் லீக் கால்பந்து சுற்றுப்போட்டிகள், இம்மாதம் 04ஆம் நாள் வியாழக்கிழமையன்று, காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் துவங்கி, 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவுற்றுள்ளது. இறுதிப்போட்டியில் Knight Riders அணி வெற்றி பெற்று, கோப்பையைத் தட்டிச் சென்றுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
நமது காயல் மாநகரில் வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப், KSC, USC மற்றும் அனைத்து விளையாட்டு சங்கத்தின் ஆதரவுடன் கடந்த 4ஆம் தேதி முதல் ஐக்கிய விளையாட்டுச் சங்கத்தில் நடத்திவந்த, VMS – Jewellers SilvOr கோப்பைக்கான காயல் பிரிமியர் லீக் கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டி இம்மாதம் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலையில் நடைபெற்றது.
இந்த போட்டியில் Knight Riders அணியும், Strange Spikers அணியும் விளையாடின. இதில் Knight Riders அணியினர் 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, VMS Jewellers SilvOr கோப்பையை தட்டிச் சென்றது.
முன்னதாக இறுதிப் போட்டியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட லயன்ஸ் கிளப்பின் மாவட்ட துணை ஆளுனர் திருமதி. அரிமா சுதந்திர லெட்சுமி MJF அவர்களுக்கு ஆட்டவீரர்களை அறிமுகம் செய்துவைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த போட்டி துவங்குவதற்கு முன்பாக Haji VMS Leebe நினைவாக நடத்தப்பட்ட 6ஆம் ஆண்டு கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் மாலை 5 மணியளவில் நடைபெற்றது. இந்த போட்டியில் V-Sapphire அணியும், V-Red அணியும் விளையாடின. இதில் ஆட்டநேர முடிவில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமநிலையில் இருந்தது. எனவே சமநிலை முறிவுமுறை கடைபிடிக்கப்பட்டது. அதில் V-Sapphire அணி 7 - 6 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினர் தலைமை தாங்கினார். காயல் ஸ்போர்டிங் கிளப்பின் செயலாளர் பேராசியர் ஜனாப்.சதக்தம்பி, வி-யூனைடெட் குழுமத்தின் மூத்த உறுப்பினர்கள் ஜனாப். அமீன், ஜனாப். வாவு ஆப்தீன் ஹாஜி, ஜனாப். பசீர் மற்றும் லயன் ஜனாப். சேக்கனா ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
நிகழ்வின் துவக்கமாக ஹாஃபிழ் B.ஹிஸாம் இறைமறை வசனத்தை ஓதினார். அதனைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது. அதனையடுத்து வரவேற்புரையை பாலப்பா அப்துல்காதர் நிகழ்த்தினார். பின்னர் சால்வை அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் லயன்ஸ் கிளப்பின் மாவட்ட துணை ஆளுனர் திருமதி. அரிமா சுதந்திர லெட்சுமி MJF அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். நிகழ்வின் தொடராக பரிசளிப்பு விழாவிற்கு முன்னதாக ஜஹாங்கிர் நன்றியுரை நிகழ்த்தினார்.
அடுத்ததாக சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசினை வீ-யூனைடெட் குழுமத்தின் உறுப்பினர் சகோ. காழிஅலாவுத்தீன் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, ஹாஜி VMS லெப்பை நினைவு கால்பந்து போட்டியில் அரையிறுதி வரை முன்னேறி அணிகளான V-White மற்றும் V-Silver அணிகளுக்கு தலா 500 ரூபாய் பரிசினை ஜனாப் துளிர் M.L. சேக்கனா அவர்களும், ஜனாப். பசீர் அவர்களும் வழங்கினார்கள். இந்த பரிசுக்கான அணுசரனையை காயல்பட்டினம் Faams நிறுவனத்தினர்கள் வழங்கினார்கள்.
வெற்றிக்கு முனைந்த V-Red அணி வீரர்களுக்காக தனிநபர் பரிசு, ரொக்கப்பரிசு ரூபாய் 1000 மற்றும் சுழற்கோப்பையை வாவு ஆப்தீன் ஹாஜி வழங்கினார்கள். ரொக்கப் பரிசுக்கான அணுசரனையை ஹாங்காங் V-United Forex நிறுவனத்தினத்தினர்கள் வழங்கினார்கள்.
வெற்றிபெற்ற அணியான V-Sapphire அணி வீரர்களுக்கு தனிநபர் பரிசு மற்றும் சுழற்கோப்பையினை ஜனாப் பசீர் வழங்கினார். ரொக்கப்பரிசு ரூபாய் 2000-தை ஜனாப். அமீன் அவர்கள் வழங்கினார்கள். இந்த பரிசுக்கான அணுசரனையை ஹாங்காங் V-United Exports நிறுவனத்தினத்தினர் வழங்கினார்கள்.
அதனைத் தொடர்ந்து வீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் 2015 - VMS Jewellers SilvOr கோப்பைக்கான பரிசளிப்பு நிகழ்வுகள் துவங்கின. முதலாவதாக நடுவர்களுக்கான பரிசுகளை ஜனாப். துளிர் M.L. சேக்கனா வழங்கினார். அதனைத் தொடர்ந்து போட்டியித் தொடரின் சிறந்த பின்கள வீரராக Gallery Birds அணியின் ஃபைஸல், சிறந்த கோல் கீப்பராக Strange Spikers அணியின் நெய்னா, சிறந்த நடுக்கள வீரராக Knight Riders அணியின் O.A.K. யாஸர், சிறந்த முன்கள வீரராக Strange Spikers அணியின் இப்றாஹீம், சிறந்த அணியாக Janseva, சிறந்த வீரராக Strange Spikers அணியின் அஃப்ராஸ் ஆகியோர்கள் தேர்வு செய்யப்பட்டு, சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. இப்பரிசுகளை வாவு ஆப்தீன் ஹாஜி வழங்கினார்கள்.
அதனைத் தொடர்ந்து அரையிறுதிக்கு தகுதிபெற்ற அணிகளான Gallery Birds மற்றும் Bangkok Ball Blasters அணிகளுக்கான பரிசுத் தொகை ரூ.4000-ஐ ஜனாப். அமீன் அவர்களும், ஜனாப். பசீர் அவர்களும் வழங்கினார்கள். அந்த பரிசுக்கான அணுசரனையை காயல்பட்டினம் Faams மற்றும் சென்னை Blossoms நிறுவனத்தினர்கள் வழங்கினார்கள்.
இரண்டாம் இடம் பிடித்த Strange Spikers அணி வீரர்களுக்கான தனிநபர் பரிசுகளை வாவு ஆப்தீன் ஹாஜி வழங்கினார்கள். ரூபாய் 12 ஆயிரம், சுழற்கோப்பை மற்றும் அணிக்கான தனி கோப்பையினை காயல் ஸ்போர்டிங் கிளப்பின் செயலாளர் பேராசிரியர் ஜனாப். சதக்தம்பி அவர்கள் வழங்கினார்கள். இந்த பரிசுக்கான அணுசரனையை காயல்பட்டினம் Vilak 2000 நிறுவனத்தினர்கள் வழங்கினார்கள்.
முதல் இடம் பிடித்த Knight Riders அணி வீரர்களுக்கான தனிநபர் பரிசு, ரூபாய் 17 ஆயிரம், சுழற்கோப்பை மற்றும் அணிக்கான தனி கோப்பையினை சிறப்பு விருந்தினர் லயன்ஸ் கிளப்பின் மாவட்ட துணைஆளுனர் திருமதி. அரிமா சுதந்திர லெட்சுமி MJF அவர்கள் வழங்கினார்கள். இந்த பரிசுக்கான அணுசரனையை சென்னை T.Nagar L.K.S. Gold House நிறுவனத்தினர்கள் வழங்கினார்கள்.
முன்னதாக இறுதிப் போட்டியை காணவந்த ரசிகர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டது, அதில் 50 நபர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, பரிசளிப்பு விழாவின் இறுதியில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. இப்பரிசுகளை காயல்பட்டினத்தின் பிரபல நிறுவனங்களான, L.T.S. Jewellers, A.K.M. Jewellers, J.J.Jewellers, Janseva மற்றும் Bismillah Agency ஆகியவைகள் வழங்கின.
இப்போட்டிகள் சிறப்புடன் நடைபெற உதவிய எல்லாம் வல்ல இறைவனுக்கும், V-United KPL - Cricket மற்றும் Football போட்டிகள் நடத்த மைதானங்கள் தந்துதவிய KSC, USC நிர்வாகத்தினருக்கும், கால்பந்து மற்றும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற வீரர்கள் தந்துதவிய USC, KSC மற்றும் நகரின் அனைத்து விளையாட்டு மைதானங்களுக்கும், அணிகளுக்கு பொறுப்பேற்ற அனுசரணையாளர்களுக்கும், போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும், போட்டிகளின் போது தினந்தோறும் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கும், போட்டிகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் வெளியிட்ட காயல்பட்டணத்தின் அனைத்து இணையதள செய்தியாளர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கும், ஒலி - ஒளி அமைத்துதந்தவர்களுக்கும், வீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் போட்டிகள் சிறப்புடன் நடைபெற எங்களோடு ஒத்துழைத்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப்-ன் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
M.ஜஹாங்கீர்
கடந்தாண்டு (2014) வீ-யுனைட்டெட் கால்பந்து சுற்றுப்போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
வீ-யுனைட்டெட் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |