ரமழான் (1436) மாத அமாவாசை ஜூன் 16 புதன்கிழமை அன்று - இங்கிலாந்து நேரப்படி மதியம் 2:05 மணி அளவில் ஏற்படுகிறது. அப்போது
இந்திய நேரம் மாலை 7:35.
ஜூன் 16 அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 6:36 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 6:28. காயல்பட்டினத்தில் சூரியன்
மறைந்த 59 நிமிடங்கள் கழித்தே அமாவாசை நிகழ்கிறது. காயல்பட்டினத்தில் - வெறுங்கண்கள் கொண்டு அன்று பிறையை காண இயலாது.
ஜூன் 16 அன்று தொலைநோக்கிகளின் உதவிக்கொண்டு, தென் பசிபிக் கடல் பகுதிகளில் பிறையை காணலாம்.
ஜூன் 17 அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 6:37 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 7:21. சூரியன் மறையும்போது சந்திரனின்
வயது 23 மணி நேரம். சூரியன் மறைந்து வானில் 44 நிமிடம் வரை பிறை இருக்கும். காயல்பட்டினத்தில் - வானிலை சூழல் தெளிவாக இருந்தால்,
பிறையை காணலாம்.
வட அமெரிக்க கண்டத்தின் மத்திய மற்றும் தென் பகுதி, மத்திய அமெரிக்க கண்டம், தென் அமெரிக்க கண்டம், ஆப்ரிக்கா கண்டத்தின் மத்திய
மற்றும் தென் பகுதிகளில் பிறையை - வெறுங்கண்கள் கொண்டு எளிதாக காணலாம்.
அமெரிக்க நாட்டின் மீதி பகுதிகள், வட ஆப்ரிக்கா கண்ட பகுதிகள், சவுதி அரேபியா, தெற்கு ஈரான், தெற்கு பாகிஸ்தான், தென் இந்தியா, தென்
கிழக்கு ஆசிய நாடுகள், ஆஸ்திரேலியா பகுதிகளில் வானிலை சூழல் தெளிவாக இருந்தால் வெறுங்கண்கள் கொண்டு பிறையை காணலாம்.
உலகின் இதர பகுதிகளில் தொலைநோக்கிகள் உதவிக்கொண்டு பிறையை காணலாம்.
பிறையை கணக்கிட்டு அறியலாம் என்ற நிலையில் உள்ளவர்களுக்கு - ஜூன் 17 - ரமழான் 1 ஆகும்.
உலகில் எங்கே பிறை காணப்பட்டாலும் அதனை ஏற்று கொள்ளலாம் என்ற கொள்கையில் உள்ளவர்க்கு ஜூன் 16 (அமாவாசை) அன்று ஷாபான் 29
பூர்த்தி ஆகிறது. அன்று - தென் பசிபிக் கடல் பகுதியில் - தொலைநோக்கிகளின் உதவிக்கொண்டு பிறையை காணலாம். அவ்வாறு பிறை காணப்பட்ட
தகவல் வந்தால் ஜூன் 16 அன்று ஷாபான் 29 பூர்த்தி செய்து, ஜூன் 17 அன்று ரமழான் மாதம் துவக்குவர். அவ்வாறு தகவல்
கிடைக்கவில்லையெனில் - ஜூன் 17 அன்று ஷாபான் 30 பூர்த்தி செய்து, ஜூன் 18 அன்று ரமழான் மாதம் துவக்குவர்.
அந்தந்த இடங்களில் பிறை காணப்பட வேண்டும் என்ற கொள்கையில் உள்ளவர்களுக்கு ஜூன் 16 (அமாவாசை) அன்று ஷாபான் 28 பூர்த்தி ஆகிறது.
எனவே அவர்கள் ஜூன் 17 அன்று ஷாபான் 29 பூர்த்தி செய்வர். ஜூன் 17 அன்று காயல்பட்டினத்தில் பிறையை வெறுங்கண்ணால் - வானிலை சூழல்
தெளிவாக இருந்தால் - காணலாம். அவ்வாறு கண்டால், அவர்கள் ஜூன் 17 அன்று ஷாபான் 29 பூர்த்தி செய்து, ஜூன் 18 அன்று ரமழான் மாதம்
துவக்குவர்.
ஜூன் 17 அன்று வானிலை சூழல் காரணமாக பிறை தென்படவில்லையென்றால், அவர்கள் ஜூன் 18 அன்று ஷாபான் 30 பூர்த்தி செய்து, ஜூன் 19
அன்று ரமழான் மாதம் துவக்குவர்.
|