ஹிஜ்ரீ 1436 ரமழான் தலைப்பிறை குறித்து முடிவு அறிவிப்பதற்கான - காயல்பட்டினம் ஜாவியா - மஹ்ழரா உலமாக்கள் கூட்டுக் கூட்டம், ஜாவியா அரபிக்கல்லூரி வளாகத்தில் இன்று (ஜூன் 17 புதன்கிழமை) மஃரிப் தொழுகைக்குப் பின், 19.15 மணியளவில், மவ்லவீ ஹாஃபிழ் என்.டீ.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ தலைமையில் தலைமையில் நடைபெற்றது.
ரமழான் தலைப்பிறை காணப்பட்ட தகவல்கள் கிடைக்கப்பெறாததையடுத்து, இன்று ஷஃபான் 30ஆம் இரவு என்றும், ஜூன் 19 வெள்ளிக்கிழமையன்று ரமழான் முதல் நோன்பு நோற்க வேண்டுமென்றும் – ஜாவியா, மஹ்ழரா உலமாக்கள் கூட்டுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹிஜ்ரீ 1436 ரமழான் தலைப்பிறை தொடர்பான அறிவிப்பும், கூட்டத்தில் கலந்துகொண்ட மார்க்க அறிஞர்களின் கைச்சான்றுப் பதிவுகளும் வருமாறு:-
காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் முதல்வரும், தமிழக அரசின் தூத்துக்குடி மாவட்ட காழீயுமான மவ்லவீ எஸ்.டீ.அம்ஜத் அலீ மஹ்ழரீ ஃபைஜீ துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1435) ரமழான் தலைப்பிறை தொடர்பாக மஹ்ழராவில் நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[விரிவான தகவல்கள், படங்கள் இணைக்கப்பட்டுள்ளன @ 23:33 / 17.06.2015] |