காயல்பட்டினத்தில், இளம்பெண் வீட்டில் கருகிய நிலையில் கிடந்தது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
உடன்குடி காலன்குடியிருப்பு உசேன் மகள் நபீலா பெனாசீர் (22). இவருக்கும் காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெரு முகம்மது ரபீக் மகன் யூசுப் அலாவுதீனுக்கும் (27) கடந்த ஆண்டு ஆகஸ்ட் 03ஆம் தேதி திருமணம் நடந்தது. யூசுப் அலாவுதீன் சென்னையில் உள்ள ஒரு நகைக் கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக நபீலா பெனாசீர் தனது தாய் வீடான காலன்குடியிருப்பிற்குச் சென்றார். இந்நிலையில் நபீலா பெனாசீரின் தாயார் ஜமீனத் சென்னைக்கு சொந்த வேலையாக செல்வதால் நபீலா பெனாசீரை காயல்பட்டினம் கொண்டு விட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் நபீலா பெனாசீர் நேற்று மதியம் தனது வீட்டில் கருகிய நிலையில் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இது குறித்து நபீலா பெனாசீரின் பெரியம்மா பதர் நிஷாவிற்கு தகவல் தெரிவிததனர். பதர் நிஷா ஆறுமுகநேரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். சப் இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்குப்பதிவு செய்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். திருச்செந்தூர் ஆர்.டி.ஓ தியாகராஜன் விசாரனை நடத்தி வருகிறார்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross