வழமைபோல, நடப்பாண்டு ரமழான் மாதத்திலும் காயல்பட்டினத்திலுள்ள பள்ளிவாசல்களில் நோன்புக் கஞ்சி ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
காயல்பட்டினம் புறவழிச்சாலையையொட்டி அமைந்துள்ளது மஸ்ஜித் ஷெய்கு ஸலாஹுத்தீன் பள்ளி என்ற மேலப்பள்ளி. இப்பள்ளியை, புதுப்பள்ளி நிர்வாகமே நிர்வகித்து வருகிறது. இப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்படும் நோன்புக் கஞ்சிக்கு 4 நாட்களுக்கு மட்டும் - புதுப்பள்ளி, மேலப்பள்ளி மஹல்லாவாசிகளிடம் அனுசரணை கோரப்பட்டுள்ளது. இதுகுறித்து, அப்பள்ளியின் நடப்பாண்டு கஞ்சி ஏற்பாட்டுக் குழு தலைவர் எஸ்.எச்.ரியாஸ் தெரிவித்துள்ளதாவது:-
அன்பின் புதுப்பள்ளி, மேலப்பள்ளி மஹல்லாவாசிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹ்...
இறையருளால், இவ்வாண்டும் புனிதமிக்க ரமழான் மாதத்தில் நம் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வழமைபோன்று நோன்புக் கஞ்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு
கோழிக்கறிகஞ்சி - ரூ.9300 என்றும்
ஆட்டிறைச்சிக்கஞ்சி - ரூ.11800 என்றும்
வெண்கஞ்சி - ரூ.7300 என்றும்
செலவு மதிப்பிடப்பட்டுள்ளது.
4 நாட்களுக்கு மட்டும் அனுசரணை தேவைப்படுகிறது. ரமழான் பிறை 04, 08, 09, 20 ஆகிய நான்கு நாட்களுக்கு மட்டும் அனுசரணை தேவைப்படுகிறது. நமது இப்பள்ளிவாசலைப் பொருத்த வரை, பொருளாதார சூழல் காரணமாக - அனுசரணையளிக்கும் நிலையிலுள்ள மஹல்லாவாசிகள் எண்ணிக்கை மிகவும் குறைவு. எனவே, வெளியூர் - வெளிநாடுகளில் வசிக்கும் புதுப்பள்ளி, மேலப்பள்ளி மஹல்லாவாசிகளிடம் இந்த வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.
தாங்கள் இந்த நன்மையான காரியத்திற்காக அனுசரணையளித்து, அல்லாஹ்வின் நல்லருளைப் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். அனுசரணையளிக்க விரும்பும் அன்பர்கள் இச்செய்தியின் அடியிலேயே உங்கள் தொடர்பு விபரங்களைப் பதிவு செய்தோ அல்லது
ஜனாப் ஏ.எஸ்.அஷ்ரஃப் (தொடர்பு எண்: +91 95439 11747) அவர்களையோ அல்லது
என்னையோ (எனதுதொடர்பு எண்: +91 97902 52129) தொடர்புகொண்டு விபரம் தெரிவிக்க கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |