வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் 10ஆம் ஆண்டு துவக்க விழா, இம்மாதம் 17ஆம் நாள் புதன்கிழமையன்று காலை 11.00 மணியளவில், மாணவியர் ஒருங்கிணைப்புப் பயிற்சியுடன் நடைபெற்றது.
தகவல் தொழில்நுட்பத் துறை இரண்டாமாண்டு மாணவி எஃப்.நஸீஹாஃ பாத்திமா கிராஅத் ஓதினார். தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடுாந்து, தகவல் தொழில்நுட்பத்துறை தலைவர் ஐ.ஷர்மின் மேரி ஜானகி வரவேற்புரையாற்றினார். தலைமை தாங்கிய கல்லூரியின் நிறுவனர் தலைவர் வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான், கல்லூரியின் சிறப்பு மற்றும் வளர்ச்சி குறித்து உரையாற்றினார்.
மாணவியர் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க முறைகள் குறித்து முதல்வர் (பொறுப்பு) இரா.அருணாஜோதி, இயக்குநர் முனைவர் மெர்ஸி ஹென்றி ஆகியோர் பேசினர்.
பாளையங்கோட்டை ஸதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் பேராசிரியர் முனைவர் ஏ.நிஃமத்துல்லாஹ், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி செயலாளர் வாவு எம்.எம்.முஃதஸிம், துணைச் செயலாளர் மவ்லவீ ஹாஃபிழ் வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக் அஸ்ஹரீ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாணவியர் பேரவையின் செயல்பாடுகள் குறித்து, கணினி அறிவியல் துறைத்தலைவரும் - மாணவியர் பேரவை ஒருங்கிணைப்பாளருமான ஏ.நேசா ஆக்னஸ் பெலின்டா உரையாற்றினார். மார்க்கக் கல்வி மற்றும் நீதி போதனைகள் குறித்து, அரபி மொழித்துறை தலைவர் முத்து மொகுதூம் ஃபாத்திமா பேசினார்.
கல்லூரி நூலகத்தின் பயன்பாடு, தேர்வு நடைமுறை, நாட்டு நலப்பணித்திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் நன்மைகள், விளையாட்டுத் துஐறயின் செயல்பாடுகள், வினாடி-வினா மற்றும் இதர செயல்பாடுகள் குறித்து, முறையே கணிதத் துறை தலைவர் ஜி.அமுதா, வணிக நிர்வாகவியல் துறை தலைவர் எஸ்.ஏ.ரஹ்மத் ஆமினா பேகம், பொருளியல் துறை தலைவர் எம்.சூரத் ஷீபா, வணிக நிர்வாகவியல் துறை உதவிப் பேராசிரியர் ஜெ.புவனேஸ்வரி, வணிகவியல் துறை தலைவர் எல்.ஆர்.சுபா ஆகியோர் விளக்கிப் பேசினர்.
ஆங்கிலத் துறை தலைவர் எஸ்.கிருஷ்ணவேணி நன்றி கூற, தகவல் தொழில்நுட்பத் துறை மாணவி மக்தூம் மர்ழிய்யா துஆவைத் தொடர்ந்து, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |