காயல்பட்டினத்தில் மாட்டிறைச்சி, கிலோவுக்கு 40 ரூபாய் விலையேற்றப்பட்டுள்ளது.
கிலோ 200 ரூபாய்க்கு விற்பனையான இறைச்சி, 12.12.2014 முதல் 40 ரூபாய் அதிகரித்து, 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது மீண்டும் இம்மாதம் 19ஆம் நாள் முதல் 40 ரூபாய் உயர்த்தப்பட்டு, கிலோ 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
விலையேற்றம் குறித்து, இறைச்சிக்கடை உரிமையாளர் ஒருவரிடம் விசாரித்தபோது, ஆண்டுதோறும் மாடுகளின் விலை ஏற்றம் காண்பதால், அதற்கேற்ப ஆண்டுக்கு ஒருமுறை இவ்வாறு விலையேற்றம் செய்யப்படுவதாகக் கூறினார்.
ஆனால், முந்தைய விலையேற்றம் நடைமுறைக்கு வந்து 6 மாதங்கள் மட்டுமே கடந்துள்ள நிலையில் மீண்டும் இவ்வாறு விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மாட்டிறைச்சி விலையேற்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |