சஊதி அரபிய்யா - தம்மாம் காயல் நல மன்றம் சார்பில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த 141 ஏழைக் குடும்பங்களுக்கு, 2 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் செலவு மதிப்பில் அத்தியாவசிய சமையல் பொருளுதவி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அம்மன்றத்தின் செய்தியறிக்கை:-
சஊதி அரபிய்யா - எமது தம்மாம் காயல் நல மன்றம் சார்பாக இந்த கண்ணியமிக்க ரமலான் மாதத்தில் எல்லா தரப்பினரும் மனமகிழ்வுடன் நோன்புகளை நோற்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் மூன்றாம் வருடமாக 141 குடும்பங்களுக்கு நோன்பு கால உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டன.
ஒரு குடும்பத்திற்கு ரூ1,690 மதிப்பில், 141 குடும்பங்களுக்கு - மொத்தம் ரூ.2,38,290.00 செலவில் நோன்பு கால அத்தியாவசிய உணவுப் பொருட்களை மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதிகளான டாக்டர் .முஹம்மது இத்ரீஸ் ,ஜனாப்.மெஹர் அலி மற்றும் செயற்குழு உறுப்பினர் ஜனாப்.சாதுலி ஆகியோர்கள் பயனாளிகளின் இல்லம் சென்று வழங்கினர். இதனை பெற்ற பயனாளிகள் மனமகிழ்வுடன் நன்றி தெரிவித்து துஆ செய்தனர்.
இதற்கான தொகை முழுவதையும், தம்மாம் காயல் நல மன்ற அங்கத்தினரால் மனமுவந்து தாராளமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. கிருபையான அல்லாஹ் இந்த நற்செயலை அங்கீகரித்து மகத்தான நற்கூலிகளை தருவானாக!
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
முத்துவாப்பா (புகாரி)
செயற்குழு உறுப்பினர்
தம்மாம் காயல் நல மன்றம் சார்பில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1435) அத்தியாவசிய சமையல் பொருளதவி செய்யப்பட்ட தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
தம்மாம் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[செய்தி திருத்தப்பட்டது @ 20:02 / 20.06.2015] |