சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம், வரும் ஜூலை மாதம் 03ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள காயலர்களுக்கு அழைப்பு விடுத்து, அதன் செயலாளர் ஏ.டீ.ஸூஃபீ இப்றாஹீம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
எமது மன்றத்தின் அன்பான உறுப்பினர்களுக்கு இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்.
மேலும் இப்புனித மாதத்தில் எல்லா நற்காரியங்களை அடையக்கூடிய பாக்கியத்தை நம் யாவர்களுக்கும் வல்ல இறைவன் உரித்தாக்கி தருவானாக ஆமீன்.
முக்கியம் நம்மன்றத்தின் 50-வது பொதுக்குழு கூட்டம் இன்ஷா அல்லாஹ் வரும் ஜூலை மாதம் 3-ம் தேதி இப்தார் நிகழ்வோடு நடத்த திட்டமிட்டுள்ளோம். உங்களின் மற்றும் நமதூரில் இருந்து புதிதாய் வந்திருக்கும் நண்பர்கள் அனைவரின் வருகையை எதிர்நோக்கும்...
தங்களுக்கு அறிந்த (மன்றத்தில் இதுவரை இணையாத) உறுப்பினர்களையும் அழைத்து வருமாறு அன்புடன் வேண்டி கொள்கிறோம்.
எம்மன்றத்தின் ரமலான் மாத பொதுக்குழுவில் வைக்கப்படும்'வருடத்தின் ஒரு நாள் ஊதியம் வழங்கும் திட்டம்' இவ்வாண்டும் வழமைப்போல் உண்டியல் வைத்து, விருப்பமுள்ளவர்கள் அதனருகில் இருக்கும் காலி கவரில் (ENVELOPE) பயன்படுத்தி உங்கள் தொகையை செலுத்தலாம் என்பதை அறிவித்து கொள்கிறோம்.
கூட்ட நிகழ்விடம்:
இடம்: ஷிபா அல் ஜசீரா பாலி கிளீனிக் - பார்ட்டி ஹால் (3-வது மாடி), பத்ஹா
தேதி: 03-ஜூலை, 2015 (வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணி முதல்...)
குறிப்பு: வழமையான அறுசுவை காயல் கஞ்சியோடு இதர தின்பண்டங்களும் இன்ஷா அல்லாஹ்... வஸ்ஸலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
நோனா செய்யித் இஸ்மாஈல்
செய்தி தொடர்பாளர் - ரியாத் கா.ந.மன்றம்
ரியாத் காயல் நல மன்றத்தின் முந்தைய பொதுக்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ரியாத் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |