காயல்பட்டினம் பெரிய ஷம்சுத்தீன் வலிய்யுல்லாஹ் பள்ளியில் ஆண்டுதோறும் ரமழான் மாதத்தில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில், இம்மாதம் 22ஆம் நாளன்று பதிவு செய்யப்பட்ட இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள் வருமாறு:-
இஃப்தார் நிகழ்ச்சியில் நாள்தோறும் 30 முதல் 50 பேர் வரை கலந்துகொள்கின்றனர். அவர்களுக்கு, பேரீத்தம்பழம், தண்ணீர், கஞ்சி, வடை உள்ளிட்டவை பரிமாறப்படுகிறது.
இப்பள்ளியில், காயல்பட்டினம் கொச்சியார் தெருவைச் சேர்ந்த ஹாஃபிழ் எஸ்.எச்.ஷெய்கு அலீ மவ்லானா இமாமாகவும், காயிதேமில்லத் நகர் முதல் தெருவைச் சேர்ந்த எம்.ஏ.அபூதாஹிர் முஅத்தினாகவும் பணியாற்றி வருகின்றனர்.
இப்பள்ளியில் ரமழான் தராவீஹ் தொழுகையில் முழு குர்ஆனும் ஓதி முடிக்கப்படுகிறது. நடப்பாண்டு தராவீஹ் தொழுகையை காயல்பட்டினம் எம்.ஏ.கே. தெருவைச் சேர்ந்த ஹாஃபிழ் ஷெய்கு தாவூத் பொறுப்பேற்று வழிநடத்தி வருகிறார். இவர், காயல்பட்டினம் ஹாமிதிய்யா திருக்குர்ஆன் மனனப் பிரிவில் பயின்று, நடப்பாண்டு நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டம் பெற்றவராவார்.
இப்பள்ளியின் தலைவராக வாவு எம்.எம்.முஃதஸிம், செயலாளராக ஜெஸ்மின் ஏ.கே.கலீல், துணைச் செயலாளராக ‘ஜுவெல் ஜங்ஷன்’ கே.அப்துல் ரஹ்மான் ஆகியோர் சேவையாற்றி வருகின்றனர்.
இதுநாள் வரை இப்பள்ளியின் இமாம் ஹாஃபிழ் ஷெய்கு அலீ மவ்லானா ரமழான் தராவீஹ் தொழுகையையும் நடத்தி வந்தார். சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து தொழுகையை வழிநடத்தி வந்த அவர், இயலாமை காரணமாக கடந்தாண்டு முதல் அப்பொறுப்பைத் தவிர்த்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1435) பெரிய ஷம்சுத்தீன் வலிய்யுல்லாஹ் பள்ளியில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சிகள் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
பெரிய ஷம்சுத்தீன் வலிய்யுல்லாஹ் பள்ளியின் வரலாற்றுத் தகவல்கள் உள்ளிட்ட விபரங்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
பெரிய ஷம்சுத்தீன் வலிய்யுல்லாஹ் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
நடப்பாண்டு இஃப்தார் நிகழ்ச்சிகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |