காயல்பட்டினம் சதுக்கைத் தெருவின் வடமுனையில் அமைந்துள்ளது மஸ்ஜித் மீக்காஈல் எனும் இரட்டை குளத்துப் பள்ளி (இர.கு.ப.).
நிர்வாகம்:
இப்பள்ளிவாசலில், ஹாஜி எம்.கே.முஹ்யித்தீன் தம்பி (துரை) தலைவராகவும், ஹாஜி எஸ்.ஏ.எம்.முஹ்யித்தீன் தம்பி செயலாளராகவும், ஹாஜி பி.எஸ்.ஏ.மரைக்கார் ஸாஹிப் பொருளாளராகவும் சேவையாற்றி வருகின்றனர்.
இமாம் - பிலால்:
இப்பள்ளிவாசலில், ராமநாதபுரம் மாவட்டம் - எஸ்.பீ.பட்டினத்தைச் சேர்ந்த மவ்லவீ ஹாஃபிழ் முஹம்மத் ஹஸன், காயல்பட்டினம் அம்பல மரைக்கார் தெருவைச் சேர்ந்த ஹாஃபிழ் இசட்.எம்.முஹம்மத் முஹ்யித்தீன் ஆகியோர் இமாம்களாகவும், காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர்களான பிரபு இப்றாஹீம், முஹ்யித்தீன் தம்பி ஆகியோர் பிலால்களாகவும் பணியாற்றி வருகின்றனர். இரண்டு இமாம்கள், இரண்டு பிலால்கள் பணியாற்றும் - நகரின் ஒரே பள்ளியாகும் இது. அம்பலம் கணக்கராகவும், அப்துல்லாஹ் ஊழியராகவும் பணியாற்றுகின்றனர்.
கஞ்சி & கந்தூரி கமிட்டி:
இப்பள்ளியில், நடப்பாண்டின் ரமழான் சிறப்பேற்பாடுகளைக் கவனிக்கும் கஞ்சி கமிட்டியினர் மற்றும் ரமழானையடுத்து - ஷவ்வால் மாதத்தில் இப்பள்ளியில் நடைபெறும் நான்கு வலிய்யுல்லாக்கள் கந்தூரி கமிட்டியினராக,
ஹாஜி வி.என்.எஸ்.முஹம்மத் முஹ்யித்தீன் தலைவராகவும்,
எம்.கே.காதர் செயலாளராகவும்,
எம்.ஏ.கே.அப்துல் ஹஸீப் பொருளாளராகவும் செயல்பட்டு வருகின்றனர்.
ரமழான் மாதத்தில், வழமை போல நடப்பாண்டிலும் நோன்புக் கஞ்சி தயாரிக்கப்பட்டு, மஹல்லாவாசிகளுக்கு வினியோகிக்கப்படுவதுடன், இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியும் நாள்தோறும் நடைபெற்று வருகிறது.
கஞ்சி வினியோகம்:
நாள்தோறும் மாலையில் வினியோகிக்கப்படும் நோன்புக் கஞ்சியை, அப்பள்ளி மஹல்லாவைச் சேர்ந்த 130 முதல் 150 குடும்பத்தினர் வரை பெற்றுச் செல்கின்றனர். இது தவிர, பள்ளியின் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் இல்லங்களுக்கும் நாள்தோறும் கஞ்சி அனுப்பி வைக்கப்படுகிறது.
இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி:
நாள்தோறும் மாலையில் நடைபெறும் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில், இப்பள்ளி மஹல்லா ஜமாஅத்தைச் சேர்ந்த 100 முதல் 150 பேர் வரை கலந்துகொள்கின்றனர். அவர்களுக்கு பேரீத்தம்பழம், தண்ணீர், கஞ்சி, வடை வகைகள் உள்ளிட்ட பதார்த்தங்கள் பரிமாறப்படுகிறது.
படக்காட்சிகள் (இஃப்தார்):
23.06.2015 அன்று இப்பள்ளியில் நடைபெற்ற இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சியின்போது பதிவு செய்யப்பட்ட படக்காட்சிகள் வருமாறு:-
தகவல் & படங்கள்:
சீனாவிலிருந்து...
V.D.சதக்கு தம்பி
இரட்டை குளத்துப் பள்ளியின் இஃப்தார் நிகழ்ச்சி குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
இரட்டை குளத்துப் பள்ளியின் வரலாறு உள்ளிட்ட தகவல்களை உள்ளடக்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
இரட்டை குளத்துப் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
நடப்பாண்டு ரமழான் இஃப்தார் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |