காயல்பட்டினம் ஸீ-கஸ்டம்ஸ் சாலை, முத்துவாப்பா தைக்கா தெரு, தீவுத்தெரு ஆகியவற்றுக்கிடையில் அமைந்துள்ளது குருவித்துறைப் பள்ளி. இங்கு ஆண்டுதோறும் ரமழான் மாதத்தில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்:
நடப்பாண்டில், 24.06.2015 அன்று பதிவு செய்யப்பட்ட இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள் வருமாறு:-
இஃப்தார் நிகழ்ச்சியில் நாள்தோறும் 100 முதல் 200 பேர் வரை கலந்துகொள்கின்றனர். அவர்களுக்கு, பேரீத்தம்பழம், தண்ணீர், கஞ்சி, வடை உள்ளிட்டவை பரிமாறப்படுகிறது.
கஞ்சி வினியோகம்:
நாள்தோறும் மாலையில் வீடுகளுக்காக வினியோகிக்கப்படும் ஊற்றுக் கஞ்சியை, இப்பள்ளி மஹல்லா ஜமாஅத்தைச் சேர்ந்தோர் உட்பட 200 குடும்பத்தினர் பெற்றுச் செல்கின்றனர்.
புதிய நிர்வாகிகள்:
12.10.2014 அன்று நடைபெற்ற பள்ளியின் பொதுக்குழுக் கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம் பள்ளியின் தலைவராகவும்,
என்.எஸ்.நூஹ் ஹமீத் துணைத்தலைவராகவும்,
எஸ்.ஏ.செய்யித் முஹம்மத் ஸாலிஹ், கே.எஸ்.முஹம்மத் நூஹ், கே.எம்.செய்யித் அஹ்மத் ஆகியோர் இணைச் செயலாளர்களாகவும் உள்ளனர்.
இமாம் - முஅத்தின் - தராவீஹ் இமாம்:
இப்பள்ளியின் இமாமாக - காயல்பட்டினம் தீவுத் தெருவைச் சேர்ந்த மவ்லவீ ஹாஃபிழ் எம்.எல்.முஹம்மத் அலீ ஃபைஜீ , முஅத்தினாக - சதுக்கைத் தெருவைச் சேர்ந்த சதக்கு இப்றாஹீம் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
நடப்பாண்டு ரமழான் தராவீஹ் சிறப்புத் தொழுகையை, காயல்பட்டினம் மரைக்கார் பள்ளித் தெருவைச் சேர்ந்த ஏ.எல்.நூருல் அமீன் என்பவரது மகன் ஹாஃபிழ் என்.ஏ.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ வழிநடத்துகிறார்.
ஏற்பாட்டுக் குழு:
ஒய்.எஸ்.ஃபாரூக், கம்பல்பக்ஷ் எஸ்.எச்.பாக்கர் ஸாஹிப், வாட்ச்மேக்கர் செய்யித் இப்றாஹீம், கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத், எஸ்.ஏ.ஷெய்கு அலீ, எஸ்.ஏ.காஜா, நஹ்வீ எம்.எம்.முத்துவாப்பா, எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன் ஆகியோர் நடப்பாண்டு கஞ்சி ஏற்பாடு மற்றும் ரமழான் சிறப்பேற்பாடுகள் குழுவினராக உள்ளனர்.
தகவல்களுள் உதவி:
M.A.K.ஜெய்னுல் ஆப்தீன்
குருவித்துறைப் பள்ளியில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1435) நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
குருவித்துறைப் பள்ளியின் வரலாற்றுத் தகவல்கள் உள்ளிட்ட விபரங்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
குருவித்துறைப் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
நடப்பாண்டு இஃப்தார் நிகழ்ச்சிகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |