காயல்பட்டினம் ஹாஃபிழ் அமீர் வலிய்யுல்லாஹ் பள்ளியில் ஆண்டுதோறும் ரமழான் மாதத்தில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்:
நடப்பாண்டில், 27.06.2015 அன்று பதிவு செய்யப்பட்ட இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள் வருமாறு:-
இஃப்தார் நிகழ்ச்சியில் நாள்தோறும் 30 முதல் 50 பேர் வரை கலந்துகொள்கின்றனர். அவர்களுக்கு, பேரீத்தம்பழம், தண்ணீர், கஞ்சி, வடை உள்ளிட்டவை பரிமாறப்படுகிறது. வெண்கஞ்சி அரிதாகிப் போன இக்காலகட்டத்திலும், இப்பள்ளியில் வெண்கஞ்சியும், கறிகஞ்சியும் மாற்றி மாற்றி தயாரிக்கப்படுகிறது. நடப்பாண்டில் இப்பள்ளியில் தயாரிக்கப்படும் வெண்கஞ்சி, வழமையான வெண்கஞ்சிகளின் சுவையிலிருந்து பெரிதும் மாறுபட்டுள்ளது. மருத்துவ குணம் கொண்ட சில பொருட்கள் கூடுதலாக சேர்க்கப்படுவதே அதற்குக் காரணமாகும்.
நிர்வாகிகள்:
இப்பள்ளியில், ஹாஜி அஹ்மத் முஹ்யித்தீன் என்ற கோப்பி ஹாஜியார் தலைமையில், கே.கே.எஸ்.காதர் முஹ்யித்தீன், எஸ்.இப்னு ஸஊத், கோப்பி அமீர் அலீ ஆகியோரை ஆலோசனைக் குழுவினராகக் கொண்டு, இப்பள்ளி நிர்வாகம் இயங்கி வருகிறது.
கஞ்சி கமிட்டி:
ப்ரிண்ஸ் ஷாஹுல் ஹமீத், கோப்பி ஹாஜியார், ஜின்னா, ம.கு.ஷாஹுல் ஹமீத், பீர் கான் ஆகியோர் நடப்பாண்டு கஞ்சி ஏற்பாட்டுக் குழுவினராக உள்ளனர்.
இமாம் - முஅத்தின் - தராவீஹ் இமாம்:
காயல்பட்டினம் சின்ன நெசவுத் தெருவைச் சேர்ந்தவர்களான மவ்லவீ ஏ.அபுல் ஹஸன் ஷாதுலீ ஃபாஸீ பள்ளியின் இமாமாகவும், மரைக்கார் பள்ளித் தெருவைச் சேர்ந்த ஏ.ஏ.ஜியாத் முஅத்தினாகவும் பணியாற்றி வருகின்றனர்.
இப்பள்ளியில் ரமழான் தராவீஹ் தொழுகையில் முழு குர்ஆனும் ஓதி முடிக்கப்படுகிறது. நடப்பாண்டு தராவீஹ் தொழுகையை காயல்பட்டினம் சின்ன நெசவுத் தெருவைச் சேர்ந்த இக்பால் என்பவரது மகன் ஹாஃபிழ் ஜெய்னுல் ஆப்தீன், ஆத்தூரைச் சேர்ந்த அன்ஸாரீ என்பவரு மகன் ஆகியோர் பொறுப்பேற்று வழிநடத்தி வருகிறார்.
தகவல் & படங்கள்:
செய்யித் அஹ்மத்
ஹாஃபிழ் அமீர் வலிய்யுல்லாஹ் பள்ளியில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1435) நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஹாஃபிழ் அமீர் வலிய்யுல்லாஹ் பள்ளியின் வரலாற்றுத் தகவல்கள் உள்ளிட்ட விபரங்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஹாஃபிழ் அமீர் வலிய்யுல்லாஹ் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
நடப்பாண்டு இஃப்தார் நிகழ்ச்சிகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |